மணிக்கு 180 கி.மீ ஸ்பீடில் பாய்ந்த வந்தே பாரத் ஸ்லீப்பர்.. ரயிலுக்குள் நடந்த மேஜிக்.. வீடியோ பாருங்க
சென்னை: வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் மத்தியில் அதீத வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது படுக்கை வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பயன்பாட்டுக்கு கொண்டு வர ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், மணிக்கு 180 கி.மீ. வேகத்திலும் அதிர்வில்லாமல் இயக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வீடியோவை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் அதிநவீன சொகுசு ரயிலாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. முழுவதும் ஏசி வசதி, அதிவேகம், சொகுசு இருக்கைகள், தானியங்கி கதவுகள், வைஃபை வசதி, அடுத்து வரும் ஸ்டேஷன் பற்றிய அறிவிப்பு என வந்தே பாரத் ரயில்களில் உள்ள வசதிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

வந்தே பாரத் ரயில்
இந்தியாவின் பிரீமியம் ரயிலாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கட்டணம் கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும், பிற அதிவிரைவு ரயில்களை விட வேகமாக செல்வதால் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் ஆர்வம் உள்ளது. எடுத்துக்காட்டாக சொல்வது என்றால், சென்னையில் இருந்து நெல்லைக்கு சுமார் 600 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
இந்த வழித்தடத்தில் செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூட சராசரியாக 10 மணி நேரத்திற்கும் மேல் பயண நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. ஆனால் வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்தில் சென்னை டூ நெல்லை சென்றுவிடும். பயண நேரம் சுமார் 2 மணி நேரம் மிச்சப்படுவதால் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க பயணிகள் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
படுக்கை வசதியுடன் கூடிய
தற்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்து வந்தனர். இதனை பூர்த்தி செய்யும் விதமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை தயாரிக்கும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டது.
இந்த ரயில் தயாரிப்பு பணிகள் நிறைவடையும் நிலையில், விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட இந்த ரயில்கள் மாநிலம் விட்டு மாநிலம் என தொலைதூரங்களுக்கு இரவு நேர ரயில்களாக இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ வெளியிட்ட மத்திய அமைச்சர்
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் புதுடெல்லி - லக்னோ ரூட்டில் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த பயண இலக்கை தோராயமாக 8 மணி நேரத்தில் கடக்கும் என்று சொல்லப்படுகிறது. தற்போது வரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதேபோல, எப்போது முதல் இயக்கப்படும் என்ற தகவலும் இல்லை.
Vande Bharat Sleeper tested today by Commissioner Railway Safety. It ran at 180 kmph between Kota Nagda section. And our own water test demonstrated the technological features of this new generation train. pic.twitter.com/w0tE0Jcp2h
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 30, 2025
எனினும், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனை ஓட்டம் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டம் பற்றிய வீடியோ ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
180 கிமீ வேகத்தில் பாய்ந்த ரயில்
அதில், மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ரயில் செல்கிறது. ரயிலின் லோகோ பைலட் கேபினுக்குள் மூன்று கண்ணாடி கிளாஸ்களுக்கு மேல் ஒரு தண்ணீர் நிரப்பப்பட்ட கிளாஸ் வைக்கப்பட்டுள்ளது. ரயில் அவ்வளவு வேகத்தில் சென்றாலும் கூட, கண்ணாடி கிளாசில் இருந்து ஒரு சொட்டு நீரும் வெளியேறவில்லை. கண்ணாடி கிளாசும் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயணிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளன. இது தொடர்பான வீடியோவை பதிவிட்டுள்ள அஸ்வினி வைஷ்ணவ் அதில் கூறியிருப்பதாவது:-
கண்ணாடி கிளாசில் வைக்கப்பட்ட தண்ணீர்
"ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இன்று சோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தானின் கோட்டா - நாக்டா பிரிவுக்கு இடையில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. கண்ணாடி கிளாசில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் ஆடாமல், அசையாமல் இருந்தது ரயிலின் புதிய தொழில்நுட்ப அம்சங்களை நிரூபித்தது" என்று பதிவிட்டுள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications