பயணிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுதே! வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை எப்போது.. ரூட் எது? மாஸ் அப்டேட்
சென்னை: பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரயில்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. இந்த ரயில் சேவை எப்போது தொடங்கும் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவில் ரயில் சேவை மேம்படுத்தப்பட்டு வருகிறது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, வந்தே பாரத் உள்ளிட்ட சொகுசு ரயில்களை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே எடுத்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வந்தே பாரத் ரயில்: இதனால், தற்போது நாடு முழுவதும் சுமார் 50 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் பகல் நேர ரயில்கள் ஆகும். தமிழகத்திலும் சென்னை - நெல்லை, சென்னை - கோவை, சென்னை- பெங்களூர் -மைசூர், கோவை - பெங்களூர் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஸ்லீப்பர் ரயில் சேவை: விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகள் கொண்டதாக வந்தே பாரத் ரயில்கள் உள்ளதால் இதில் பயணிக்க பயணிகள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அடுத்த கட்டமாக, வந்தே பாரத் ரயில்களை போலவே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் அறிமுகப்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது.
இரவு நேர பயணம்: தொலை தூர பயணங்களுக்கு இந்த ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே இருக்கும் நிலையில், இந்த ஸ்லீப்பர் ரயிலில் படுக்கை வசதி கொண்டதாக இருக்கும். இரவு நேர பயணம் செல்பவர்களுக்கும் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கும் ஏற்றார் போல், வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தயாரிப்பு பணி தீவிரம்: மேலும் இதற்காக வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் மாதிரி படங்களும் வெளியாகின. பயணிகளை கவரும் விதமாக சொகுசு வசதிகளுடன் இந்த ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்குவது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனை ஓட்டம் (trail run) தொடங்க இருக்கிறதாம்.
முதலில் எந்த ரூட்?: இதனால், வெகு விரைவிலேயே வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக டெல்லி - மும்பை, டெல்லி - ஹவ்ரா ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் 1,000 கி.மீட்டர் தொலைவு வரை இயக்கப்படலாம் என்றும் 15 - 20 பெட்டிகளை கொண்டதாக இந்த ரயில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications