வந்தே பாரத் ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு! குட் நியூஸ் சொன்ன சோமண்ணா
சென்னை: வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படும் என ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்த போது கூறியதாவது: வந்தே பாரத் ரயிலில் ஏழை எளிய , நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யும் வகையில் அதன் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இதுகுறித்து பிரதமர் மோடியிடம் ஆலோசனை நடத்தினோம். ரயில்வே துறையின் செயல்பாடும் ராணுவம் போன்றது. நாட்டில் ராணுவம் முதலிடத்தில் உள்ளது. ரயில்வே துறை 2ஆவது இடத்தில் உள்ளது. அதற்கேற்ப 2 துறைகளின் செயல்பாடுகளும் இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகில் பொருளாதாரத்தில் 5ஆவது மிகப் பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது. வந்தே பாரத் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதிவேகமாக இயங்கும் ரயிலாக வந்தே பாரத் உள்ளது. தற்போது நாடு முழுவதும் 55 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் வெவ்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவை சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர், சென்னை சென்ட்ரல் -மைசூர், சென்னை சென்ட்ரல் -விஜயவாடா, சென்னை எழும்பூர் -திருநெல்வேலி, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்பம், கூடுதல் வசதிகள், பாதுகாப்பு, குளிர்சாதன வசதி, வேகம் உள்ளிட்டவைகளால் இந்த ரயில்கள் பயணிகளுக்கு உதவியாக இருக்கின்றன.
நடப்பாண்டில் கோடை காலத்தில் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் சென்னையில் இருந்து வெவ்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்கள் மூலம் ரூ 19.20 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கோடையில் நாள்தோறும் இயக்கப்பட்ட அனைத்து விரைவு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் கட்டணம் அதிகமான வந்தே பாரத் ரயிலில் பயணித்ததும் அதன் வருவாய் அதிகரிப்புக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் வந்தே பாரத் ரயில்கள் மட்டுமல்லாமல் மற்ற ரயில்களின் சேவையை அதிகரித்தால் குறைந்த டிக்கெட்டில் மக்கள் அதிக பயனடைவர் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் பயணிகளுக்கு 857 பெர்த்கள் இருக்கும், ஒவ்வொரு பெட்டியிலும் மினி பேண்ட்ரி இருக்கும். இந்த ஸ்லீப்பர் ரயில்கள் இந்தியாவின் ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVN Limited) கூட்டமைப்பால் தயாரிக்கப்படுகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications