தமிழகத்துக்கே மகிழ்ச்சி.. படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்.. ஓஹோ, இதைதான் சொன்னாங்களா? பளபள ஆரஞ்சு
சென்னை: தற்போது, தமிழக மக்களின் கவனம் முழுவதும், சாதாரண வந்தே பாரத் ரயிலின் மீது குவிந்துள்ளது.. இந்த ரயில் தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சாதாரண பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.. கடந்த ஆகஸ்ட்டில் இதற்கான பணிகள் துவங்கியது.. மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் தொழிற்சாலையில், இதற்கான இன்ஜின்களும் தயாரிக்கப்பட்டன. பெரம்பூரில் உள்ள கேரேஜ் மற்றும் லோகோ ஒர்க்சில் ஏரோடைனமிக் முகப்பு தோற்றம் கொண்ட 2 என்ஜின்கள் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன.

ஸ்பெஷல்கள்: இந்த ரயிலில், ஏசி வசதி கிடையாது.. சாதாரண பெட்டிகள்தான் இருக்கும்.. 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்பட 22 பெட்டிகளை கொண்டது.. சுமார் 1800 பயணிகள் இதில் பயணிக்க முடியும்... படுக்கை வசதிகளுடன் விளக்குகளும், ஃபேன்கள், சுவிட்சுகள், பேனல்கள், எல்இடி விளக்குகள் நவீன வடிவில் பொருத்தப்பட்டுள்ளன..
ஒவ்வொரு சீட்டிற்கும் செல்போன் சார்ஜர் வசதி உண்டு.. முக்கியமாக, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கழிப்பறையும் இருக்கிறதாம். எல்எச்பி பெட்டிகளுடன் இருபுறமும் மின்சார என்ஜின் கொண்டு இயங்கும். எந்த ஒரு நிலையிலும் ரயிலை பின்னோக்கி இயக்க தேவையில்லை. 2 முனைகளிலும் இன்ஜின்கள் இருக்கும். புஷ்-புல் முறை அதாவது ரயிலின் இரு முனைகளிலிருந்தும் ரயில்களை இயக்க அனுமதிக்கும் ஒரு கட்டமைப்பு இதில் இருக்கும்.
எதிர்பார்ப்பு: ஒவ்வொரு ரயில் பெட்டியும் நிரந்தர கப்ளர்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், பெட்டிகள் பிரிந்து செல்வதற்கு வாய்ப்பு இருக்காது.. ரயில் நிற்கும்போது ஏற்படும் அதிர்வுகளை பயணிகள் உணர முடியாது.. மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது.
இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு, இந்த சாதாரண வந்தே பாரத் ரயில் குறித்து தகவல் ஒன்று வெளியானது. அதாவது, சாதாரண் வந்தே பாரத்தின், முதல் ரயில் ரெடியாகிவிட்டதாம்.. உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள ஆர்டிஎஸ்ஓ எனப்படும், ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம்.
இனிமேல்தான், எந்த மார்க்கத்திலிருந்து, சாதாரண் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்ற விவரங்களை அதிகாரிகள் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது... அநேகமாக இந்த மாத இறுதியில், இந்த ரயிலை அறிமுகப்படுத்த போவதாக சொல்கிறார்கள்.
படுக்கை வசதி: இந்நிலையில், படுக்கை வசதியுடன் கூடிய ஒரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்துக்கு தயாராகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே மணிக்கு, 130 கி.மீ. வேகத்தில் இயக்கி, இந்த சாதாரண் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், சோலாப்பூரிலிருந்து மும்பை செல்வது போன்ற வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறம் கலந்த, புத்தம் புதிய ரயில் கிளம்பி செல்வது பதிவாகி உள்ளது.. ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள், இந்த படுக்கை வசதியுடன்கூடிய இந்த ரயிலை, ஆர்வத்துடன் பார்ப்பதையும் காண முடிகிறது.
சாதாரண் ரயில்: இந்த புதிய ரயிலுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்படவில்லை என்றாலும், சமூக வலைதளவாசிகள் அதை வந்தே பாரத் சாதாரண் என்ற பெயரிலேயே அழைத்து வருகிறார்கள். இதைத்தவிர, 3 வெவ்வேறு தொழில்நுட்பங்களில் 400 படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும் புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications