சென்னை பீச் டூ காட்பாடி.. வந்தே மெட்ரோ ரயில் சீறிப்பாய போகுது.. பயணிகளுக்கு விரைவில் குட் நியூஸ்
சென்னை: வந்தே பாரத் ரயில்களை போலவே, வந்தே மெட்ரோ ரயிலிலும் ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. இதனால் இந்த ரயில் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், சென்னை கடற்கரை - காட்பாடி வரை வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வரும் 3 ஆம் தேதி நடக்க உள்ளது. இதனால் விரைவில் சேவை தொடங்கப்படும் என்பதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது கிட்டத்தட்ட 60 வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே மெட்ரோ ரயில்: வந்தே பாரத் ரயில்களை போல குறுகிய தொலைவு கொண்ட இரு நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே மெட்ரோ ரயில்களையும் அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த வந்தே மெட்ரோ ரயில் அருகருகே இருக்கும் இரு முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது வந்தே மெட்ரோ ரயில் அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் தொலைவுக்குள் மட்டுமே இயங்கும்.
ஏகப்பட்ட வசதிகள்: மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலைகள் வந்தே மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முழுவதும் ஏசி வசதி, தானியங்கி கதவுகள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, எந்த இடத்தில் ரயில் செல்கிறது என்பதை காட்டும் வசதி.. அகலமான ஜன்னல் கண்ணாடிகள் என வந்தே மெட்ரோ ரயில்களில் ஏகப்பட்ட வசதிகள் இருக்கும் என ரயில்வே தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
எப்போது இயக்கப்படும்?: இதனால் இந்த ரயில் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் சென்னையில் இருந்து திருப்பதி வரையில் வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்படலாம் என தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் வந்தே மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் சென்னையில் இருந்து சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
சோதனை ஓட்டம்: வரும் 3 ஆம் தேதி சென்னை கடற்கரை - காட்பாடி ரூட்டில் இந்த வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஒட்டம் நடைபெற உள்ளது. அரக்கோணம் இடையே இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது. ஜூலை மாதத்திலேயே வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என முன்பு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், ஜூலையில் சோதனை ஓட்டம் நடைபெறவில்லை.
பயணிகள் மகிழ்ச்சி: இந்த நிலையில் தான், நாளை மறுநாள் சென்னையில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இது ரயில் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் இது குறித்த செய்தி பரவி வருகிறது. சென்னை கடற்கரை - திருவண்ணாமலை வரையேயும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகிறது.
200 பேர் நின்று செல்லலாம்: வந்தே மெட்ரோ ரயில்களை பொறுத்தவரை மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக் கூடியது. வந்தே பாரத் ரயில் போலவே ஹைடெக் வசதியுடனும் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதியுடன் கொண்டதாக இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் 100 பேர் அமர்ந்து செல்லும் வகையிலும் 200 பேர் நின்று செல்லும் வகையிலும் இந்த ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெட்டியிலும் டாய்லட் வசதியுடனும் வந்தே மெட்ரொ ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications