பின்னணி பாடகி வாணி ஜெயராமின் உடல் பெசன்ட் நகரில் இன்று தகனம்! திரைத்துறையினர் ஏராளமானோர் அஞ்சலி
வாணி ஜெய்ராமுக்கு எந்த நோயும் இல்லையென்றும், எனவே இவரது உயிரிழப்பு சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது எனவும் அவரது வீட்டில் பணியாற்றி பணிப்பெண் கூறியுள்ளார்.
சென்னை: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள இல்லத்தில் நேற்று உயிரிழந்த நிலையில் அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1971ம் ஆண்டு 'குட்டு' எனும் இந்தி திரைப்படம் மூலம் திரையுலகத்திற்கு பின்னணி பாடகியாக அறிமுகமானார். இவரது அசாத்தியமான குரல் வளத்தால் விரைவிலேயே பாடகியாக முன்னணி வரிசையில் இடம்பிடித்தார். வேலூர் மாவட்டத்தில் இசைக் குடும்பத்தில் பிறந்த இவர் இந்துஸ்தானி இசையை கற்றுக்கொண்டு அதில் தேர்ச்சி பெற்று ஆளுமையாக உருவானார். அவர் சமீப காலமாக சென்னையில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டில் இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து வீட்டில் பணியாற்றிய பெண்மணி கூறியதாவது, "நான் இங்கு 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். வாணி அம்மாவுக்கு எந்த நோயும் கிடையாது. வழக்கமாக நான் காலை 10 மணிக்கு மேல்தான் இங்கு வருவேன்.

வழக்குப்பதிவு
அதேபோல நேற்றும் வந்தபோது வாணி அம்மா கதவை திறக்கவில்லை. நான் நீண்ட நேரம் வாசலிலிருந்து கூப்பிட்டும், காலிங் பெல் அடித்தும் கூட கதவு திறக்கப்படவில்லை. எனவே நான் கீழ் வீட்டில் தகவல் சொல்லி காவல்நிலையத்திற்கு விஷயத்தை தெரிவித்தோம். தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். உள்ளே வாணி அம்மா கட்டிலிலிருந்து கீழே விழுந்திருக்கிறார். நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இயற்கைக்கு மாறான வகையில் மரணம் என்றும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

உயிரிழப்பு
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "எங்களுக்கு வாணி ஜெயராமின் கீழ் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தோம். கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது. இதனையடுத்து வாணியின் சகோதரிக்கு தகவல் தெரிவித்து அவர் கொண்டு வந்த சாவியை கொண்டு கதவை திறந்தோம். உள்ளே படுக்கை அறையில் அவர் கட்டிலிலிருந்து விழுந்தவாறு காணப்பட்டார். பரிசோதித்ததில் அவர் மரணமடைந்து கொஞ்ச நேரம் ஆகியிருப்பது தெரிய வந்தது. அருகில் இருந்த டேபிளில் இடித்துக்கொண்டு கீழே விழுந்து உயிரிழந்திருப்பார் என்று கருதினோம்.

சந்தேகம்
ஆனால் நெற்றியில் காணப்பட்ட காயம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறோம். சந்தேகம்படும்படியாக யாரேனும் வந்தார்களா? என்று விசாரித்தும், அருகில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் பரிசோதனை செய்து பார்த்தும் வருகிறோம். இயற்கைக்கு மாறான மரணம் என்று இது குறித்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை விரைவில் முடிவடைந்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்" என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தகனம்
வாணி ஜெயராமின் மரணம் நாடு முழுவதும் இசைக்கலைஞர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாணி ஜெயராம் கடந்த 50 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட படங்களில் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என 10,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இதுவரை மூன்று முறை தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். இது தவிர பல்வேறு மாநிலங்களில் மாநில விருதுகளையும் வென்றிருக்கிறார். சமீபத்தில்தான் இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இவரது உடல் இன்று பெசன்ட நகரில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications