வாணி ஜெயராம் "அதை" கடைசிவரை மறக்கலயே.. ஒருநாள் டக்குனு உள்ளே போயி.. திகைக்க வைத்த வேலூர் வாணி ஜெயராம்
சென்னை: கிட்டத்தட்ட 50 வருடங்களாக இந்திய சினிமாவில் தன்னுடைய பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் குடியிருந்து வருபவர் பிரபல பாடகி வாணி ஜெயராம்... இவரின் நெகிழ்வான பல தருணங்களை, அவரது ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.. அத்துடன் வாணி ஜெயராமின் புகழையும் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
மிகப்பெரிய பாடகி என்ற அந்தஸ்தை மிகமிக குறுகிய காலத்திலேயே வாணி ஜெயராம் பெற்றிருந்தாலும், ஒவ்வொரு பாடலையும் உயிர்மூச்சாக நினைத்து பாடுவாராம்.

உச்சரிப்பு: வார்த்தை உச்சரிப்புகளுக்கு நிறைய முக்கியத்துவம் தருவார்.. ஏதாவது ஒரு வரியில் வார்த்தை பிசகிப்பாடினால், மறுபடியும் பாடல் முழுவதையுமே, திரும்பப்பாடி பதிவு செய்யவேண்டும் என்ற முறையை கடைப்பிடிப்பாராம்.. அதாவது, ஒரு பாடலை முழுவதுமாக பாடி பதிவு செய்தால்தான் அது திருத்தமான பதிவாக இருக்கும் என்றும் நம்பக்கூடியவர்..
இப்போதுள்ள டிஜிட்டல் பதிவு முறையில், எத்தனை முறை வேண்டுமானாலும், ஒரு பாடலில் இடைநிறுத்தி தனியாக ஒரு பகுதியை பாடி அந்த பாடலில் இணைக்கமுடியும். ஆனால், இதை வாணி ஜெயராம் அவ்வளவாக விரும்பியதில்லைாம்.
தான் ஒரு பாடல் பாடினால், அது நேர்த்தியாக இருக்கவேண்டும், கேட்பவர்களுக்கு அது முழுமையான பாடலாக இருக்கவேண்டும், பிறமொழி பாடல்கள் பாடுவதாக இருந்தாலும், அதில், உச்சரிப்பு மிகவும் சரியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்.. இதற்காகவே, பலமுறை பயிற்சியும் எடுத்து கொண்டிருப்பாராம்.. பிறமொழி பாடல் என்றால், உச்சரிப்பு சரியா? என்று மொழி தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொள்வது அவரது உயர்ந்த பழக்கமாக இருந்திருக்கிறது.
யதார்த்த பேச்சு: ஒருமுறை பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி தந்திருந்தார் வாணி ஜெயராம்.. அப்போது அவரிடம், மறக்க முடியாத நம்பிக்கை எது என்று கேட்டிருந்தார்கள்.. அதற்கு வாணி ஜெயராம் சொல்கிறார்:
"உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, ஒருபோதும் மத்தவங்களுக்கு செய்யாதீங்க. மறப்போம் மன்னிப்போம்" என்று ஒரு இக்கட்டான நேரத்திலே, இந்தி இசையமைப்பாளர் வசந்த் தேசாய்ஜி எனக்கு தந்த ஆலோசனை இது. என் அனுபவத்தில் சொல்லுகிறேன், நமக்கான நேரம் வரும்வரை, நம் இலக்கு நிறைவேறும்வரை, ஒருபோதும் பொறுமையையும் உழைப்பையும் கைவிடவே கூடாது. வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இயல்பானது. மத்தவங்களுக்காக வாழணுமே தவிர, மத்தவங்களை அழிச்சு மேல வர நினைக்கக்கூடாது" என்றார் வாணி ஜெயராம்.
வேலூரில் பிறந்து, மும்பையில் இந்தி சினிமாவையே தன்பக்கம் இழுத்த பெருமை வாணி ஜெயராமுக்கு உண்டு.. ஆனாலும் இசையை தவிர, நிறைய தனித்திறமைகளும் இவரிடம் இருந்திருக்கின்றன.. கவிதைகள் எழுதுவதில் ஆர்வம், பல கவிதைகளை எழுதி, இசையும் அமைத்துள்ளார். கவிதை தொகுப்பும் வெளிவந்துள்ளது.. அதேபோல, அழகாக ஓவியம் வரையக்கூடியவராம்.. ஸ்கூல் படிக்கும்போது, நிறைய ஓவியங்களை வரைந்து ஆசிரியைகளிடம் கொண்டு போய் காட்டுவாராம்.
ஒரு சம்பவத்தை அவரது ரசிகர்கள் நினைவுகூர்கிறார்கள்.. வேலூரை சேர்ந்த வாணி ஜெயராம், வேலுார் கொசப்பேட்டை நல்லெண்ண பட்டறை தெருவில், தன்னுடைய சிறு வயதில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்... அந்த பகுதியில் உள்ள ஈவெரா அரசு பள்ளியில்தான் இவர் படித்துள்ளார்.. கலைவாணி என்ற பெயருடன் தன்னுடைய ஆரம்பக்கல்வியையும் பயின்றுள்ளார்.
ஈவேரா பள்ளி: தேசம் முழுதும் அறியப்பட்டு, புகழின் உச்சிக்கு சென்றிருந்த நிலையிலும்கூட, இறுதிவரை தான் படித்த பள்ளியை வாணி ஜெயராம் மறக்கவே இல்லை.. தான் தொடக்க கல்வி படித்த பள்ளியை நினைவில் கொண்டிருந்த வாணி ஜெயராம், கடந்த 2015-ம் ஆண்டு பள்ளிக்கு வருகை தந்துள்ளார்.
அப்போது, பள்ளி வளாகத்தில் விளையாடிய இடங்கள், தான் படித்த கிளாஸ்ரூம்கள் ஆகியவற்றை பார்வையிட்டு, தன் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்... அதுமட்டுமல்ல, தான் படித்த கிளாஸ்ரூமில் உள்ள கரும்பலகையிலும், பழைய நினைவுகளை எழுத்து வடிவில் பதிவு செய்திருக்கிறார்..
மரக்கன்றுகள்: பிறகு, இந்த பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, ஆசிரியர்களுடன் குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டு மகிழ்ந்துள்ளார்.. மக்களின் மனதை தன் இனிய குரலால் மயக்கிய கலைவாணி என்ற வாணி ஜெயராம் மறைந்தாலும், இந்த பள்ளியில் படித்த அவரின் சிறப்பு இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும் என்று நெகிழ்ந்து சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications