விஜய் எல்லாம் ஒரு மூஞ்சியா? 'அந்த' பையன் டாப்பா வருவான் பாருங்களேன்! படக்கென பேசிய வனிதா விஜயகுமார்!
சென்னை: கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் விஜயோட முகத்தை அப்படி கிண்டல் பண்ணி இருக்காங்க. நாளைய தீர்ப்பு படத்திலும் விஜய்க்கு இதுதான் நடந்தது. அதை மீறி ஜெயித்தார் எனவும், விஜய்சேதுபதி மகன் சூர்யாவையும் பீனிக்ஸ் பட விஷயத்தில் கடுமையாக விமர்சனம், கிண்டல் செய்கிறார்கள். இது அவர் பெரியா ஆளாக வருவதற்கான அறிகுறி என கூறியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.
இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடிக்க மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் நடைபெறுவது போல போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் படம் வெளியாக இருக்கும் நிலையில் செய்டியாளர்களை சந்தித்தார் வனிதா.

அப்போது பேசிய அவர், " நாளைக்கு என் படம் ரிலீஸ். இன்னும் டென்சனாக இருக்கிறேன். அழக் கூடாது என்ற எண்ணமும் உள்ளது. இந்த படம் நாளை வெளியாகி மக்கள் அதற்கு என்ன மாதிரியான வரவேற்பு கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் தான் நான் இப்போது உள்ளேன். அப்படி இருக்கும் போது, கேப்டன் ஆஃப் த ஷிப்பாக நான் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் நான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறேன்.
எங்கள் படம் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸாகும், வேறு என்னென்ன பிரச்னை என்பதில் எனக்கு எந்த தெளிவு இல்லை. அனைத்து படங்களுக்கும் இந்த நிலை தான் உள்ளது. படத்தில் அடல்ட் கண்டண்ட் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். கதை அப்படி. இன்றைய தலைமுறைக்கு பிடிக்கும் என நம்புகிறேன். படத்தின் ஹீரோ வேறு வேலைகளில் பிசியாக இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. ராத்திரி சிவராத்திரி பாடலை ரைட்ஸ் வாங்கி பயன்படுத்தி இருக்கிறோம். படத்தில் அப்பா படம் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி வருகிறது. அவர் என்னிடம் எதுவும் கேட்க மாட்டார். நானே அவரின் காப்பிரைட் தானே. என் மகள் தெலுங்கில் நடிக்கப் போகிறார்.
அடுத்து தமிழில் நடிப்பார். என் மகளை நிறைய ட்ரோல் செய்கிறார்கள். விஜய்சேதுபதி மகன் சூர்யாவையும் பீனிக்ஸ் பட விஷயத்தில் கடுமையாக விமர்சனம், கிண்டல் செய்கிறார்கள். ஒருத்தரை ட்ரோல் செய்தால் தான் தளபதி விஜய் மாதிரி ஸ்டாராக மாறுவதற்கான அறிகுறி. கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் விஜயோட முகத்தை அப்படி கிண்டல் பண்ணி இருக்காங்க. நாளைய தீர்ப்பு படத்திலும் விஜய்க்கு இதுதான் நடந்தது. அதை மீறி ஜெயித்தார்.
இதெல்லாம் ஒரு மூஞ்சியா என சொன்னார்கள். நானே நேரில் பார்த்தேன். ஆனால் எல்லா விமர்சனங்களையும் தாண்டி விஜய் இன்னைக்கு ஜெயிச்சி இருக்காரு. சூர்யா சேதுபதிக்கு நான் சொல்றது என்னன்னா போராடி அவங்க அப்பாவை விட பெரிய ஹீரோவாக வரணும். விஜய் சேதுபதி மகனும் விஜய் மாதிரி வருவார். என் மகளும் ஜெயிப்பாள். ஆரம்பத்தில் நயன்தாரா, திரிஷாவுக்கும் கூட இப்படி தான் நடந்தது" என்றார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா











Click it and Unblock the Notifications