தமிழக அரசியலே மாறும்.. டெல்லி அளவிற்கு உருவெடுக்கும் வண்ணாரப்பேட்டை.. வலிமை பெறும் போராட்டம் !
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் சிஏஏ எதிர்ப்பு ஷாகீன் பாக் போராட்டம் போல் பெரிய அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்த போகிறது.
Recommended Video
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் சிஏஏ எதிர்ப்பு ஷாகீன் பாக் போராட்டம் போல் பெரிய அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்த போகிறது.
நேற்று முதல்நாள் மாலையில் இருந்து சென்னையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் அங்கிருந்த மக்களை கடுமையாக தாக்கினார்கள்
மிக மோசமாக தடியடி நடத்தி போலீசார் அவர்களை கலைந்து செல்ல வைத்தனர். போலீஸ் தடியடியை கண்டித்து தமிழக முழுக்க தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

டெல்லி போராட்டம்
இந்த வண்ணாரப்பேட்டை போராட்டம் அப்படியே டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்திற்கு இணையானதாக மாறியுள்ளது. டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது. ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் கடந்த 10 நாட்களாக தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். ஷாஹீன் பாக் பகுதியில் கல்லூரி பெண்கள் வரை வயதான முதியவர்கள் வரை இங்கு தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள்.

ஏன்
இந்தியாவில் நடக்கும் சிஏஏ போராட்டத்திற்கு இது மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் இந்த போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. இந்த போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர்கள் சொன்னது பெரிய சர்ச்சையானது. இது பாஜகவின் தோல்விக்கு வழி வகுத்தது. அங்கு தேர்தலில் இந்த போராட்டம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஒரே மாதிரி
தற்போது வண்ணாரப்பேட்டை போராட்டமும் அதேபோல் மாறியுள்ளது. சென்னையில் மிக முக்கியமான இடத்தில் போராட்டம் நடக்கிறது. அதனால் தேசிய அளவில் இந்த போராட்டம் கவனம் பெற்றுள்ளது. அதேபோல் இந்த போராட்டத்தில் தினம் தினம் பல நூறு பேர் கலந்து கொள்கிறார்கள். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் அதிக எண்ணிக்கையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

மிக முக்கியம்
ஷாகீன் பாக் போராட்டம் போலவே பெண்கள் இதிலும் அதிக அளவில் ஈடுபட்டது உள்ளனர். இதனால், இந்த போராட்டம் ஷாகீன் பாக் போலவே தமிழக அரசியலில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வரலாம். கட்சிகளின் அரசியல் கணக்கை மாற்றலாம் என்று கூறுகிறார்கள். ஆம் ஆத்மி இதில் எடுத்த நிலைப்பாட்டை தமிழகத்தில் திமுகவும் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள் .

கண்டிப்பாக மாறும்
இந்த போராட்டம் இப்போதைக்கு முடியாது என்றும் கூறப்படுதுகிறது. ஷாகீன் பாக் போராட்டம் போல இது தொடர்ந்து நடக்கும் என்கிறார்கள். இதனால் மேயர் தேர்தலில் பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் வரலாம். அதேபோல் அடுத்த வருடம் சட்டசபை தேர்தலில், பெரிய அரசியல் மாற்றங்கள் இந்த போராட்டம் காரணமாக வரலாம். தமிழகத்தின் அரசியல் முகமே இந்த போராட்டம் காரணமாக மாறலாம் என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications