உங்களுக்கு தூக்கம் வருமா? ரிடையராகும் சைலேந்திர பாபு அவர்களே.. வேங்கைவயல், கொடி.. வெடித்த வன்னியரசு
சென்னை: மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றியது, மற்றும் அதனை எதிர்த்து போராடிய மக்களை கைது செய்தது தொடர்பாக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு.
இந்த வீடியோவை ஒரு முறை மனசாட்சியுடன் பாருங்கள் தமிழ்நாடு காவல்துறை அவர்களே! மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள மேலப்பட்டி கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கொடி 2008 ஆம் ஆண்டிலிருந்து பறந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன் சரியாக 40 ஆண்டுகளுக்கு முன் அதே இடத்தில் திரு.வை.பாலசுந்தரம் அவர்கள் அம்பேத்கர் மக்கள் இயக்கக்கொடியை ஏற்றியுள்ளார்.

இப்போது திடீரென சாதி இந்துக்களுக்கு இந்த கொடிகள் மீது வெறுப்பு ஏற்பட்டு அகற்றுவதற்கு முயற்சித்துள்ளனர். இதற்கு அவ்வூரின் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி தீபா பாதமுத்து உடந்தை. பொது இடத்தில் இருக்கிறதா? பட்டா நிலத்தில் இருக்கிறதா? என்பது குறித்து மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே இந்த வழக்கு குறித்த விபரங்களை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், காவல்துறை அவசரம் அவசரமாக சாதியவாதிகளுக்கு ஆதரவாக அறிக்கையை ஒப்படைத்தது. இதன் வழக்கு வரும் 5.6.2023 அன்று நீதிமன்றத்தில் வருகின்றது.
இந்த சூழலில், காவல்துறை விடுதலைச் சிறுத்தைகள் கொடிக் கம்பத்தையும் அம்பேத்கர் மக்கள் இயக்கக் கொடிக் கம்பத்தையும் இடித்து அகற்றியுள்ளனர்.
காவல்துறைக்கு நாம் வைக்கக்கூடிய கேள்விகள்.
1. இக்கொடிக்கம்பங்களால் ஏதேனும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறதா?
2. தனிநபர் நிலத்தில் கொடி கட்டப்பட்டதா?
அல்லது பொது இடத்தில் கட்டப்பட்டுள்ளதா?
3. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே அவசரம் அவசரமாக கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கான காரணம் என்ன?
4. ஒரே வழக்குக்காக இரு நீதிமன்றத்தை நாடி காவல்துறையை ஏமாற்றிய பாத முத்து நாடாருக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவது ஏன்?
இந்த கேள்விகளுக்கெல்லாம் தங்களிடம் பதில் இருக்கிறதா? தங்களது உயிரைவிட அதிகமாக நேசிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கொடியை பாதுகாக்க பெண்களும் பெரியவர்களும் போராடுகிறார்கள். அதற்காக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பது ஞாயமா?காவல்துறை மீது கல்லெறிந்து வீசியதாக பொய்யான வழக்கு போடுவது சரியா?
நாட்டில் எத்தனையோ கொடி பறக்கிறது. ஆனால், இந்திய ஒன்றியத்தின் ஆளுமையிலிருந்து தமிழ்நாட்டையும் தமிழர் இறையாண்மையையும் காப்பதற்காக களமாடி வருகிற எமது தலைவர் திருமாவளவன் அவர்கள் அடையாளப்படுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கொடி பறக்கக்கூடாதா? எங்கள் கொடி எடுத்தால் தான் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்க முடியுமா?
பதில் சொல்லுங்கள் திரு.சைலேந்திர பாபு அவர்களே! வரும் 30 ஆம் தேதி தாங்கள் பணி நிறைவு செய்யப்போகிறீர்கள். வாழ்த்துகள். ஆனால் உங்களால் தூங்க முடியுமா? வேங்கைவயலும் தலித்துகளின் கதறலும் தூங்க விடுமா?" என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications