லியோவுக்கு புதிய பிரச்சனை.. நடிகர் விஜய் ஈழத் தமிழர் கோரிக்கையை ஏற்பாரா? வன்னியரசு ட்வீட்டை பாருங்க
சென்னை: இலங்கையில் ஈழத்தமிழர்கள் போராட்டம் நடத்தும் நாளில் நடிகர் விஜய் லியோ திரைப்படத்தை வெளியிடாமல் ஒரு நாள் தாமதமாக வெளியிட வேண்டும் என வன்னியரசு கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
வாரிசு படத்தை தொடர்ந்து லோகோஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது லியோ திரைப்படம். எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இசை வெளியீட்டு விழா ரத்து, அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பு, தயாரிப்பாளர் - திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடு என அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சில திரையரங்குகள் படத்தை வெளியிட முடியாது என அறிவித்து உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில் இலங்கையில் 20 ஆம் தேதி தமிழர்கள் நடத்த உள்ள போராட்டம் காரணமாக லியோ திரைப்பட வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும் என நடிகர் விஜய்க்கு இலங்கை தமிழ் எம்பிக்கள் கடிதம் எழுதியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அத்துடன் ஒரு கடிதமும் பகிரப்பட்டு வருகிறது. அதில், "தங்களது லியோ திரைப்படம் இம்மாதம் 19ம் திகதி உலகெங்கும் வெளியாகின்றது. இலங்கையில் வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. தங்களது நடிப்பில் உருவாகும் திரைப்படங்களை எங்கள் தமிழர்கள் பார்த்து மகிழ்கிறார்கள்.
அதேவேளை இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் உங்களின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். அண்மையில் முல்லை தீவு மாவட்ட நீதிபதி சரவணன் ராஜா அவர்கள் மீதான இலங்கை அரசின் அழுத்தங்களினாலும், உயிர் அச்சுறுத்தலினாலும் அவர் தனது பதவியை துறந்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதற்கு நீதி கோரி பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் 20ம் தேதி வடக்கு கிழக்கில் ஹர்த்தால் கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம்.
இந்த நாளில் தங்களது திரைப்படம் வெளிவருவது எங்களது போராட்டத்திற்கு பின்னடைவாகவே இருக்கின்றது. அத்துடன் அது ஈழத் தமிழர்களை அவமதிக்கும் செயற்பாடாகவே இருக்கும். ஈழத் தமிழர்களுக்கும், உங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதனாலும், பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள் என்பதனாலும் லியோ திரைப்படக் காட்சிகளை இம்மாதம் 20ம் தேதி இலங்கையில் வெளியிடாமல் நிறுத்திவைக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.'' என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில், "நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இலங்கை மற்றும் வட கிழக்கு பகுதிகளில் திரையிட வேண்டாம் என இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியதாக வெளிவந்துள்ளது. ஆனால் அந்த கடிதத்தை தாங்கள் எழுதவும் இல்லை, வெளியிடவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ஶ்ரீதரன் (யாழ் மாவட்டம்) அவர்களும், திரு.செல்வம் அடைக்கலநாதன் (வன்னி மாவட்டம்) அவர்களும் என்னிடம் தெரிவித்தனர்.

ஆனால், வட கிழக்கு பகுதியில் வரும் 20 ஆம் தேதி நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால், அன்று ஒரு நாள் மட்டும் லியோ திரைப்படம் வெளியிடாமல் மறுநாள் வெளியிட்டால் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் என தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி திரு சரவணராஜா அவர்களை சிங்கள அரசு அச்சுறுத்தியதால், இப்போது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
நீதிபதிக்கு நீதி கேட்டும் சிங்களர்களால் அபகரிக்கப்படும் நிலங்களை தமிழர்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தியும் 20 ம்தேதி போராட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கிறது. இப்போராட்டம் வெற்றியடைய நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் ஒரே ஒரு நாள் மட்டும் தள்ளி வெளியிடுவது நல்லது. தமிழீழ மக்களின் கோரிக்கையை நடிகர் விஜய் ஏற்பாரா?" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications