விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை’ பரிசளிக்கிறேன்.. வருண் அதிரடி பேட்டி
நடிகர் விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை’ பரிசளிக்கிறேன் என்று சர்கார் கதைக்கு சொந்தக்காரரான வருண் அதிரடி பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: நடிகர் விஜயின் சர்கார் அமைக்க எனது 'செங்கோலை' பரிசளிக்கிறேன் என்று சர்கார் கதைக்கு சொந்தக்காரரான வருண் அதிரடி பேட்டி அளித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தீபாவளி அன்று சர்கார் படம் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் படத்தின் கதை தன்னுடையது அல்ல, வருணுடையதுதான் என ஒப்புக் கொண்டுள்ளார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.
மேலும் அவருக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவும் ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல் படத்தின் டைட்டில் கார்டில் கதைக்கு நன்றி வருண் என்ற வரிகள் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.

தடை கேட்கவில்லை
இந்த நிலையில் இந்த படத்தின் கதையை எழுதி செங்கோல் என்று பதிவு செய்திருந்த வருண் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த பேட்டியில், நான் சர்காருக்கு தடை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை. அங்கீகாரம் கேட்டுத்தான் கோர்ட்டுக்கு சென்றேன். எனக்கான அங்கீகாரம் படத்தில் எனக்கு கிடைத்தால் போதும் என்றுதான் கோர்ட்டுக்கு சென்றேன்.

விஜய் கதை
2004ல் நான் விஜய்க்காக எழுதிய போராட்டம் இது. அவரை மனதில்வைத்துதான் இந்த கதையை எழுதினேன். அவருக்கான படம்தான் இது.

போராட்டம்
என்னுடைய இந்த போராட்டத்திற்கு பின்னால் இருந்தது விஜய்தான். நடிகர் விஜயின் போராட்ட குணம்தான் என்னை போராட தூண்டியது. நான் விஜயை நேரில் சென்று சந்திப்பேன். விரைவில் அவரை சந்திப்பேன்.

விஜய்க்கு பரிசு
விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை' பரிசாக அளிக்கிறேன். நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications