முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லியின் மறைவு தி.மு.க-வுக்கும் இழப்பு.. ஸ்டாலின் வேதனை
Recommended Video
சென்னை: திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லியின் மறைவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த வசந்தி ஸ்டான்லியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை ராயப்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நேரில் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் வசந்தி ஸ்டான்லியின் மறைவு பற்றி பேசிய ஸ்டாலின் கவிஞர், எழுத்தாளர், திமுக பேச்சாளராக விளங்கியவர் வசந்தி ஸ்டான்லி

வசந்தி ஸ்டான்லியின் மறைவு அவரது குடும்பம் மட்டுமின்றி, தி.மு.க-வுக்கும் இழப்பு என்று தெரிவித்துள்ளார். திமுகவின் செயல் வீராங்கனையாக இருந்தவரின் மறைவால் துயரமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்
மேலும் வசந்தி ஸ்டான்லியின் மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்திலும் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார் அதில் தலைவர் கலைஞர் அவர்களால் 'கழகத்தின் கருவூலம்' என பாராட்டப்பட்ட, முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி அவர்களின் திடீர் மறைவுச்செய்தி என்னை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தலைவர் கலைஞர் அவர்களால் 'கழகத்தின் கருவூலம்' என பாராட்டப்பட்ட, முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி அவர்களின் திடீர் மறைவுச்செய்தி என்னை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
— M.K.Stalin (@mkstalin) April 28, 2019
கழக செயல் வீராங்கனையாக திகழ்ந்த அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/zS9GIDhgd1
கழக செயல் வீராங்கனையாக திகழ்ந்த அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வசந்தி ஸ்டான்லி நேற்றிரவு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications