மறையாத வடுக்கள்.. 30 ஆண்டுகால துயரம் வாச்சாத்தி.. 1992 முதல் 2023 வரை காலம் கடந்தும் சாகாத நீதி
சென்னை: வாச்சாத்தி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை தரவும் 10 லட்சம் ரூபாயும் தர உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் கடந்த 1992 முதல் 2023 வரை நடந்தது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
தர்மபுரி மாவட்டத்தில் அரூர் அருகில் உள்ள பழங்குடி கிராமம் வாசாத்தி. 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி கிராமத்திற்குள் காட்டுமிராண்டிகள் போன்று நுழைந்தனர் வனத்துறையினர். காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் இணைந்து வெறியாட்டம் நடத்தினர்.

ஒவ்வொரு வீடாக புகுந்து சந்தனக் கட்டை கடத்தியதாக 90 பெண்கள் 98 சிறுவர்கள், 15 ஆண்கள் என 133 பேரை கொத்தாக பிடித்து இழுத்துச் சென்றனர். சொல்லி மாளாத கொடுமைகளை செய்தனர். வனத்துறையினரும் காவல்துறையினரும் அழைத்துச் சென்ற பெண்களில் 18 பேரை பாலியல் வன்கொடுமை ஆளாக்கினார்கள். இரவு முழுக்க வனத்துறை அதிகாரிகளால் அந்த பெண்கள் கொடூரமாக சூறையாடப்பட்டனர்.
அந்த கிராமத்தில் இருந்த பழங்குடியினரின் வீடுகள் சூறையாடப்பட்டன. இயற்கைச் சீற்றம் வந்த பின்னர் கூட ஏதாவது ஒரு வீட்டில் மிச்சம் ஏதாவது பயன்படுத்த ஒதுங்கி இருக்கும் என்பார்கள். ஆனால் மனிதர்கள் நடத்திய இந்த வேட்டையில் ஒன்றும் மிஞ்சவில்லை. வனத்துறையினர், காவல்துறையினர் என 29 பேர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். பல போராட்டங்கள் நடத்தப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
1992ம் ஆண்டு இந்தப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் நல்லசிவம் எம்பி எழுப்பிய பின்னரே, பிரச்சனை தீவிரம் அடைந்தது. அதன் பின், வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் உள்ளிட்டவர்கள் சிபிஐ விசாரணை கோரினர்.
உரிய விசாரணை ஏதும் நடைபெறவில்லை எனக்கோரி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் 1993ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 1995ஆம்ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ விசாரணை நடத்தியதில், குற்றம்சாட்டப்பட்ட வனத்துறையைச் சேர்ந்த 155 பேர், போலீஸார் 108 பேர், வருவாய்துறையினர் 6 பேர் என மொத்தமாக 269 பேர் கைது செய்யப்பட்டனர்.
1996ஆம் ஆண்டு சிபிஐ கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவைமற்றும் கிருஷ்ணகிரி நீதிமன்றங்களில் வழக்கு நடத்தப்பட்டு, 2008-ல் தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு, கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி தீர்ப்பு அளித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் தீர்ப்பு நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நாட்டிலேயே ஒரு வழக்கில் அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்காக இது இருந்தது. 2011ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 1 கோடியே 24 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த 5 ஆண்டுகளில் 62 லட்சம் ரூபாய் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
குற்றவாளிகள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தான் வழக்கின் உண்மை நிலையை அறிய வேண்டும் என்பதாக வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை மேற்கொள்வதாக நீதிபதி வேல்முருகன் அறிவித்தார். அதன்படி இன்று நீதிபதி வேல்முருகன் வாச்சாத்தி கிராமத்துக்கு கடந்த மார்ச் மாதம் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேல் முறையீட்டு வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வாசிக்கப்பட்டது. குற்றவாளிகள் தாக்கல் செய்த அப்பீல் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தார் உயர்நீதிமன்ற நீதிபதி. மாவட்ட நீதிபதி வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்தார் நீதிபதி வேல்முருகன். வாச்சாத்தி கொடூரத்திற்கு ஆளான பெண்கள் அனைவருக்கும் அரசு வேலை வழங்கவும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி வேல்முறுகன் உத்தரவிட்டார்.
கடந்த 2011 செப்டம்பர் 29ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டிருந்த நிலையில், சரியாக 12 ஆண்டுகளுக்கு பின்னர் அதே தேதியான இன்று அதே செப்டம்பர் 29ஆம் தேதி மேல் முறையீட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டு காலம் கடந்தாலும் நீதி சாகவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டு காலம் மறையாத வடுக்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி தவித்த மக்களுக்கு மருந்து தடவியுள்ளது நீதிமன்ற தீர்ப்பு.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications