ஆதவ் அர்ஜுனா உள்ளே வந்துட்டாரே.. சாம்சங் போராட்டத்தில் திமுகவிற்கு எகிறிய பிரஷர்.. என்ன சொன்னாரு?
சென்னை: சாம்சங் போராட்டம் உச்சம் அடைந்து உள்ளது. சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை என்று உயர் நீதிமன்றமும் அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.
சாம்சங் போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு அளித்துள்ள விளக்கத்தில், அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் காவல்துறை கைது செய்து பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதே போலதான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்து விடுவிக்கப்பட்டனர். யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை. சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. அப்பகுதியில் இயங்கும் பல தொழிற்சாலைகளில் இந்த சங்கத்தை அரசு அங்கீகரித்துள்ளது. சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அரசு முடிவெடுக்க முடியவில்லை. உத்தரவு எப்படி வந்தாலும் அரசு அதனை செயல்படுத்தும். பல கோரிக்கைகளை ஏற்க நிறுவனம் முன்வந்துள்ளதால், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும், என்று தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தற்போது விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கருத்துக்களை தெரிவித்து உள்ளார். அதில், சாம்சங் நிறுவனத்திற்கும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் CITU தொழிற்சங்கத்திற்கும் இடையே கடந்த 30 நாட்களாக நீடித்து வரும் பிரச்சனைகள் குறித்து அரசு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியும் சுமுக தீர்வு எட்ட முடியாதது வேதனை அளிக்கிறது. பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்காக அரசு காட்டும் முக்கியத்துவம் அங்கு பணிபுரியும் நம் தொழிலாளர்கள் விசயத்திலும் அரசு காட்டவேண்டும்.தொழிலாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே சுமுகமான தீர்வை எட்ட அரசு வழிவகை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, காவல்துறையை வைத்து தொழிலாளர்களை அச்சுறுத்துவது என்பதோ அவர்களைக் கைது செய்வது என்பதோ இந்த பிரச்சனைக்குத் தீர்வாகாது.
இரண்டு தரப்புகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி தொழிலாளர்கள் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தீர்வை எட்டாவிட்டால் இது நாளை பிற பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அரசு விரைந்து தீர்வை எட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திமுக அரசு மீது விமர்சனம்: ஏற்கனவே திமுக அரசு மீது பல்வேறு விஷயங்களில் விசிக ஆதவ் அர்ஜுனா விமர்சனங்களை வைத்து வருகிறார். உதாரணமாக சமீபத்தில் சென்னை ஏர் ஷோவில் நடந்த சம்பவம் குறித்து விமர்சனங்களை வைத்து இருந்தார். அதில், மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் 'வான்படை சாகச' கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது.
கொளுத்தும் வெயிலில் சுமார் பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன்காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும்.சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும். இந்த நிகழ்விலோ கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை.ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அகற்ற போதிய இடவசதியை ஒருங்குபடுத்தவில்லை.பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது.அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் முடியாத முடியாத நிலையில் போக்குவரத்து நெருக்கடியும் இருந்துள்ளது.
இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை,சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டை துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது.
அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர். தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது.
எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும். அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும், என்று கூறி இருந்தார். இப்போது சாம்சங் போராட்டத்திலும் கூட திமுகவை விமர்சனம் செய்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications