பாஜகவோடு சேர நினைத்தால் திமுக தூக்கி எறியப்படும்.. ஸ்டாலினுக்கே தெரியும்.. விசிக நிர்வாகி வார்னிங்
சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலின், நாட்டின் பிரதமர் என்ற முறையிலேயே பிரதமர் மோடிக்கு மரியாதை கொடுத்திருப்பார். மோடிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என நினைத்தால் தி.மு.க தூக்கி எறியப்படும் என்பது ஸ்டாலினுக்கே தெரியும் என வி.சி.க மாநில நிர்வாகி சங்கத்தமிழன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் சென்னை வருகையைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் பல்வேறு சலசலப்புகள் எழுந்து அடங்கியுள்ளன. பிரதமர் மோடியுடன் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் காட்டிய இணக்கம் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது.
கூட்டணியில் இருக்கும் அதிமுக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இணக்கமான உறவைக் கடைபிடிக்காமல் தவிர்த்த நிலையில், ஸ்டாலினுடன் காட்டிய நெருக்கம் அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பியது.

சென்னையில் மோடி
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்காக சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூடுதல் இணக்கம் காட்டியது பல்வேறு யூகங்களைக் கிளப்பியது. கடந்த முறை பிரதமர் மோடி வந்த போது கூட, மேடையிலேயே மத்திய அரசுக்கு எதிராகப் பேசினார் ஸ்டாலின். ஆனால், இந்த முறை சிறப்பான வரவேற்பு கொடுத்து, மேடையிலேயே சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். மேலும், பிரதமர் மோடியின் பெருந்தன்மையைப் புகழ்ந்தும் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

பாஜகவும் பாராட்டு
அதேபோல, தமிழக அரசை பிரதமர் மோடியும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பாராட்டிப் பேசினர். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இந்தியாவின் கலாச்சாரத்தை, பெருமையை பறைசாற்றும் விதமாக தமிழக அரசு பயன்படுத்திக்கொண்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இரு தரப்பும் மாறி மாறி புகழ்ந்தது திமுக கூட்டணிக் கட்சிகள் மத்தியில் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

வி.சிக எதிர்ப்பு
இதற்கிடையே, பிரதமர் மோடி வருகையையொட்டி விசிகவிலும் திமுக அரசுக்கு எதிரான மறைமுகமான அட்டாக்குகள் நடந்தன. பிரதமர் மோடிக்கு திமுக எதிர்ப்புக் காட்டாமல் இருந்தது விசிகவில் கொதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கொள்கைக் கூட்டணி தொடரும் என உறுதிபடத் தெரிவித்தார்.

பிரதமர் என்ற முறையில்
இந்நிலையில், வி.சி.க மாநில இளைஞரணி தலைவர் சங்கத்தமிழன் இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், பிரதமர் என்ற முறையில் மோடி வருகை தந்தார், அவரை வரவேற்று நாங்கள் விழா நடத்தி இருக்கிறோம் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார். எனவே திமுகவாக இருந்தாலும் சரி, விடுதலைச் சிறுத்தைகளாக இருந்தாலும் சரி, சனாதனத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருந்து வருகிறது. தற்போது இங்கு நடப்பது சர்வதேச அளவிலான போட்டி, எனவே இந்தப் போட்டியில் நாட்டின் பிரதமர் என்ற முறையில் அவருக்கு மாநில அரசு மரியாதை கொடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

தூக்கி எறியப்படும் என்பது ஸ்டாலினுக்கே தெரியும்
அந்த அடிப்படையில்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு மரியாதை கொடுத்திருப்பார் என விடுதலைச் சிறுத்தைகள் நம்புகிறது. இந்த அழைப்பு கூட்டணிக்காக, அல்லது தனிப்பட்ட நலன் சார்ந்ததாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை, ஒருவேளை மோடிக்கு முட்டுக்கொடுக்க, மோடிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என நினைத்தால் தி.மு.க தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்படும் என்பது ஸ்டாலினுக்கே நன்கு தெரியும். அதனால் தான் அன்று நடந்த நிகழ்வு குறித்து அவர் அறிக்கை கொடுத்திருக்கிறார்.
Recommended Video

திமுக கோட்பாட்டின் வாரிசாக இருப்பார்
இன்று திமுக வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு கூட்டணி பலம் தான் ஒரே காரணம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அதிமுக வலிமையான கட்சிதான் ஆனால் அது பாஜக உடன் இணைந்த ஒரே காரணத்தால் இரண்டாக உடைந்து நிற்கிறது. நாளைக்கு இதே போல் திமுக பாஜகவை தூக்கிப் பிடித்தால் என்ன நடக்கும் என்பதை ஸ்டாலின் அறிவார், அவர் கருணாநிதியின் வாரிசாக மட்டும் அல்ல, திமுகவின் வாரிசாக மட்டுமல்ல, திமுக கோட்பாட்டின் வாரிசாக இருப்பார் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications