இலங்கை அதிபர் தேர்தல்..எலக்ஷன் முடிந்த பின் ட்வீட் போட்ட திருமா.! அரியநேந்திரனுக்கு ஓட்டு போடனுமாம்
சென்னை : இலங்கை அதிபர் தேர்தலில், தமிர்களின் பொது வேட்பாளர் அரியநேந்திரனை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கையில் 4.00 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், 4.02 மணிக்கு திருமாவளவன் அரியனேந்திரனுக்கு வாக்களிக்க கோரி இருப்பது தமிழ்த் தேசிய வாதிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. இந்நிலையில் தற்போது பல மாத இடைவேளைக்குப் பிறகு தேர்தல் நடைபெறும் நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில், இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்ரம சிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரமேதாசா, இராஜபக்சேவின் மூத்த மகன் நமால் பக்சே, ஜே.வி.பி.சார்பாக அனுரா குமார திசநாயக்கா ஆகியோர் சிங்கள தரப்பில் போட்டியிடுகின்றனர்.
இதேபோல், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுர குமார திஸனநாயகே, எதிர்க்கட்சி தலைவராக உள்ள எஸ்ஜேபி எனும் சமாகி ஜன பலவேகய கட்சியின் சஜித் பிரேமதாசா, ஈழத்தமிழர் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் ஆகியோரும் களத்தில் உள்ளனர். இன்று காலையில் அம்பிளாந்துரை கலைமகள் வித்தியாலயத்தில் அரியநேந்திரன் வாக்களித்தார். இத்தகைய சூழலில் தான் தற்போது அரியநேந்திரனுக்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது. அதாவது தமிழர்களின் ஓட்டு என்பது மொத்தமாக அவருக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் அரியநேந்திரனை ஆதரித்து ஓட்டு செலுத்தி வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினர் அரியநேந்திரனுக்கு ஓட்டளித்தாலும் அவர் வெற்றி பெறப்போவது இல்லை. இதனால் ரணில் விக்கிரமசிங்கே, சஜிதா பிரேமதாசா, அனுரா குமார திஸனநாயகே ஆகியோரில் ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்று ஓட்டு செலுத்தி வருகின்றனர். இன்னொரு தரப்பினரோ தேர்தலை புறக்கணிக்கும் மனநிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில், தமிர்களின் பொது வேட்பாளர் அரியநேந்திரனை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். 4 மணி வரை தேர்தல் நடைபெற்ற நிலையில், 4.02 மணிக்கு அரியநேந்திரனுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," இலங்கையில் சனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் (செப்டம்பர்-21) இன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய சனாதிபதி இரணில் விக்ரம சிங்கே உட்பட எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரமேதாசா, இராஜபக்சேவின் மூத்த மகன் நமால் பக்சே, ஜே.வி.பி.சார்பாக அனுரா குமார திசநாயக்கா ஆகியோர் சிங்கள தரப்பில் போட்டியிடுகின்றனர்.
தமிழ் மக்களின் சார்பில் பொது வேட்பாளராக திரு. அரியநேந்திரன் அவர்கள் களமிறங்கியுள்ளார். இத்தேர்தல் பரப்புரையின்போது திரு.அரியநேந்திரன் அவர்களுக்கு தமிழ் மக்கள் அளித்த வரவேற்பும் பேராதரவும் சிங்கள கட்சிகளிடையே சற்று அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது என தெரியவருகிறது. தமிழர்களிடையே காணப்படும் இத்தகைய ஒற்றுமையும் எழுச்சியும் மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.
தமிழர்களின் பொது வேட்பாளர் போராளி அரியநேந்திரன் அவர்கள், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்குரியவர். அத்துடன், அவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழ விடுதலைப் போராளியான தோழர் அரியநேந்திரன் அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால், சிங்கள பவுத்த பேரினவாதிகளின் தொடர் ஒடுக்குமுறைகளிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியும்.
ஆகவே, திரு. அரியநேந்திரன் அவர்களுக்குத் ஈழத் தமிழ்சொந்தங்கள் அனைவரும் 'சங்கு' சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டுகிறோம். போர்க்களத்தில் நம்மை வீழ்த்திய இனவெறிப் பகைவர்களைத் " தேர்தல் களத்தில் நாம் தோற்கடிப்போம். தமிழின விரோத சிங்களத் தலைமைகளோடு தொடர்ந்து தமிழீழத்தைச் சிதைக்கத் துடிக்கும் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ஆதிக்கத்தைத் தகர்த்து தமிழீழ தனித்துவத்தை நிறுவுவோம்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications