திருமாவளவன் சுளீர்.. "இந்த பாஜக அரசியலே இதுதான்.. உளவு குழு தேவை".. அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை

தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதிய மதவாத வன்முறைகளை தூண்டும் வகையில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிபிரிவு உளவு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

    சாதி, மத ரீதியில் பிளவு ஏற்படுத்துவோரை கண்டறிய உளவு அமைப்பு தேவை - தொல். திருமாவளவன்

    சென்னை கொளத்தூரில் தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அமைச்சர்கள் சேகர் பாபு, சா.மு நாசர், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன் பாஜக அரசு மீது சரமாரியான விமர்சனத்தை முன்வைத்தார்.. மேலும் தமிழக அரசுக்கும் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்தார்.

    திருமா

    திருமா

    திருமாவளவன் பேசியபோது, "பொது துறை வங்கிகளை தனியார் மையப்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன. ஆனால் இன்றைக்கு பாஜக அரசு அனைத்தும் தனியார் மையபடுத்துவதில் தீவிரம் காட்டுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணி செய்து கொண்டு இருக்கிறது. இந்த போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. வங்கி ஊழியர்களின் போராட்டம் வெல்ல விடுதலை சிறுத்தைகள் உற்ற துணையாக இருக்கும்.

    வேதனை

    வேதனை

    அரசு பேருந்தில் நரிகுறவர் சமூகத்தை சார்ந்தவர்களை வலுகட்டாயமாக கீழே இறக்கிவிடப்பட்டு இருக்கிறார்கள். 21ம் நூற்றாண்டில் இத்தகைய கொடுமைகள் தமிழகத்தில் அரங்கேறி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இது கடுமையான வேதனையை உருவாக்குகிறது. மாண்புமிகு முதல்வர் இதில் தீவிரம் கவனம் செலுத்த வேண்டும்.

    வதந்திகள்

    வதந்திகள்

    கருத்து சுதந்திரம் என்கிற பேரில் அவதூறுகளைப் பரப்புவது வதந்திகளை பரப்புவதுதான் பாஜகவின் அரசியல்... இவர்கள் செய்வது அரசியல் நடவடிக்கை அல்ல சமூக விரோத நடவடிக்கை. வன்முறையை தூண்டும் வகையில் வதந்திகளை பரப்பும் பிரிவினைவாத சக்திகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களை வதந்தி பரப்புவதற்காக தவறாக பயன்படுத்தும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

     தேசிய கீதம்

    தேசிய கீதம்

    தேசத்தை எந்த அளவிற்கு மதிக்கிறோமோ அதே அளவிற்கு தாய்மொழியும் மதிக்க வேண்டும். அவரவர் தாய் மொழியை உயர்வாக பேசுவதையும் மதிப்பை கொடுப்பதையும் நாம் பார்க்கிறோம். எனவே தேசிய கீதத்திற்கு கொடுக்கும் அதே மரியாதையை தமிழர்கள் தமிழ் தாய் வாழ்த்துக்கும் கொடுக்கிறார்கள். அம்பேத்கர் பிறந்த நாளன்று சாதியவாத மதவாத சக்திகள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறு பரப்புகிறார்கள்..

     பிரிவினைவாதம்

    பிரிவினைவாதம்

    தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளின் வன்முறை அதிகரித்து வருகிறது. சமூக பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சமூக விரோதிகள் செயல்பட்டு வருகிறார்கள்.. எனவே இவற்றை அடக்கும் வகையில் சாதிய மதவாத வன்முறைகளைத் தூண்டும் வகையில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி உளவு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டை குறி வைத்திருக்கிறார்கள் மதவாத சக்திகள்.. மதவெறி களமாக தமிழகத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள்..

     உளவு குழு

    உளவு குழு

    வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள்.. அதனால்தான், தனியே சிறப்பு உளவு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன்.. காவல் துறையின் சார்பில் பிரிவினை வாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்" என்றார் திருமாளவன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+