சென்னை டிஜிபி அலுவலகம் முன்பாகவே.. ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் தாக்கிய விசிகவினர்.. பரபரப்பு
சென்னை: சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலக வாயிலில், புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசிக தலைவர் திருமாவளவனை இழிவாகப் பேசியதாக கூறி விசிகவினர் ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்ததாக தகவல் வெளியாகியுள்ள்து.
புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, இன்று பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளிக்க வந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர்களுடன் டிஜிபி அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது, அலுவலக நுழைவு வாயிலில் நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளது.

ஏர்போர்ட் மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகவும், அதனால் தான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விசிகவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் தாக்கிய அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.
சென்னை காவல்துறை டிஜிபி அலுவலக வாயிலில், போலீசார் முன்னிலையையே, செய்தியாளர்கள் பலர் முன்னிலையில் நடந்த இந்தச் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறைக்கும், அரசுக்கும் தெரிந்தே தான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர் என ஏர்போர்ட் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications