Tamil Thai Vazhthu: வந்தே மாதரம் பாடல் சர்ச்சை! ஆதவ் அர்ஜுனாவுக்கு விசிக வன்னியரசு பதிலடி!
சென்னை: வந்தே மாதரம் பாடல் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு விசிக சட்டசபை குழுத் தலைவர் வன்னியரசு எம்எல்ஏ பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது கண்டன பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய தேசிய பாடலான வந்தே மாதரம்' பாடப்படுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த ஜனவரி 28-ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 5 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் குறிப்பிட்ட பாடல் எந்தெந்த நிகழ்வுகளில் இசைக்கப்பட வேண்டும், எங்கெங்கெல்லாம் பாடப்பட வேண்டும், அப்பாடலின் வரிகள் என்ன உள்ளிட்ட விவரங்களை கொண்டுள்ளது.

பதவியேற்பு நிகழ்ச்சிகள், குடியரசுத்தலைவர், ஆளுநர் ஆகியோர் அரசு நிகழ்ச்சிகளுக்கு பங்கேற்க வரும் போதும், அந்நிகழ்விலிருந்து வெளியேறும் போதும், குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதும் வந்தே மாதரம் இசைக்கப்படலாம் என்று அந்த அறிக்கை சொல்கிறது.
ஆனால் வந்தே மாதரம் பாடல் எங்கெல்லாம் பாடப்படலாம் என்று சொல்லப்படும் பகுதியில், அணிவகுப்பு, கொடியேற்றப்படும் நிகழ்வு, கலாச்சாரம் நிகழ்வுகளில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதுடன் பாடப்படலாம்.
ஆனால் குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்வில் மட்டுமே பாடப்படலாம் என்று குறிப்பிடும் அறிக்கை, மற்ற எந்தவித நிகழ்வுகளையும் 'May Be' என்று தான் குறிப்பிடுகிறது. அதாவது மற்ற நிகழ்வுகளில் பாடுவது கட்டாயமானது அல்ல.
ஒரு நிகழ்வில் தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் பாடப்படுமாயின், முதலில் தேசிய பாடலான வந்தே மாதரம் தான் பாட வேண்டும் என்று மத்திய அரசின் அறிக்கையில் கடைசி பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.
ஆக, மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள்படியும், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி நடைமுறையில் உள்ள வழக்கத்தின்படியும், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதற்கு எந்தவித தடையும் இல்லை. அதேநேரம் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட வேண்டியதும் இல்லை.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வை தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். ஆளுநருடன் இணைந்தே தமிழ்நாடு அரசும் இந்த அநீதியை அரங்கேற்றியதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். தேசிய இனத்தின் அடையாளத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பது
தமிழ்நாடு முதல்வர் விஜய்யின்
மிக முக்கியமான கடமையாகும் என விசிகவின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய பாடலான
— வன்னி அரசு (@VanniTamizhVCK) May 10, 2026
'வந்தே மாதரம்' பாடப்படுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த
சனவரி 28ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 5 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் குறிப்பிட்ட பாடல் எந்தெந்த நிகழ்வுகளில் இசைக்கப்பட வேண்டும், எங்கெங்கெல்லாம் பாடப்பட வேண்டும், அப்பாடலின்… https://t.co/Z3GlJ6djtI pic.twitter.com/LiRhnqfQuL
முதல்வராக விஜய் பதவியேற்ற போதும், தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்ற போதும் முதலில் வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு பலர் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இதற்கு விளக்கமளித்திருந்தார். அதில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.
இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்! என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications