"கொட்டத்தை அடக்க.." குடியரசு தலைவர் தேர்வில் இதை பண்ணுங்க.. ஸ்ட்ரெயிட்டா ஸ்டாலினிடம் போன ரவிக்குமார்
முதல்வர் ஸ்டாலினுக்கு எம்பி ரவிக்குமார் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: மிக முக்கியமான பிரச்சனையை, அவசியத்தை விசிக பொதுச்செயலாளரும் எம்பியுமான ரவிக்குமார் இன்றைய தினம் எழுப்பி உள்ளார்.
வரும் ஜூலையில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த குடியரசு தலைவர் வேட்பாளர் யார் என்ற கேள்வி இப்போதே எழ ஆரம்பித்துவிட்டது..
கடந்த முறை பாஜக கூட்டணி சார்பாக முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் பெரும்பான்மை வாக்குகளை பெற்று குடியரசுத் தலைவர் ஆனார்.

விசிக
இந்த முறையும், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக பொதுவான ஒரு வேட்பாளரை களமிறக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது, காரணம், நடந்து முடிந்த சில மாநிலங்களின் தேர்தல்களில் பாஜக சரிவையே சந்தித்தது.. அதனால் பல மாநிலங்களில் பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் பலம் கிடையாது.. விரைவில் நடக்க போகும் 5 மாநில தேர்தல்களின் முடிவுகளில், அக்கட்சிகளின் எம்எல்ஏக்களின் பலம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.. அதுமட்டுமல்லாமல், சிவசேனா, அகாலி தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணியிலும் இல்லை... அதனால் மிக தீவிரமான யோசனையில் அக்கட்சி இப்போதே இறங்கி வருகிறது.

தமிழிசை
இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த சில தினங்களாகவே, ஒரு செய்தி கசிந்து வருகிறது.. அதன்படி அனைவருமே ஏற்கக்கூடிய வகையில், அப்துல் கலாம் போல ஒரு பொதுவான மற்றும் மதிக்கக்கூடிய தலைவரை பாஜக வேட்பாளராக முன்னிறுத்த உள்ளதாகவும், அதன்படி, தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜனை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதற்கு மற்ற பாஜக மேலிட தலைவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்பது சந்தேகமே.

சரத்பவார்
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு, நடக்க போகும் குடியரசு தலைவர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை அனைத்து கட்சிகளின் வேட்பாளராக கருத வேண்டும் என்று சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் கூறியிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டடணி ஆட்சி ஏற்படுவதற்கு சரத்பவார் முக்கிய காரணமாக இருந்தார் என்பதுகூட, சஞ்சய் ராவத் நோக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்.

தமிழர் நலன்
ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர்க்கு சம்பந்தப்பட்டவர்களை வேட்பாளராக சொல்லிவரும் நிலையில், நம் தமிழகத்தில் முதல் குரலை எழுப்பி உள்ளார் விழுப்புரம் எம்பி ரவிக்குமார்.. தன்னுடைய தொகுதியின் நலனையும் தாண்டி, ஒட்டுமொத்த தமிழர் நலன் குறித்தும் அக்கறை எடுத்து கொள்பவர் ரவிக்குமார்.. அதிலும் பாதிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று அவர்களுக்காக தன் குரலை விடாமல் உயர்த்தி எழுப்புவர்.. தமிழர் நலனுக்காக, டெல்லிவரை சென்று எத்தனையோ விஷயங்களை பெற்று தந்தவர்.

ரவிக்குமார் எம்பி
அந்த வகையில் இப்போதும் ஒரு கோரிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் எழுப்பி உள்ளார்.. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்த முயற்சியுங்கள் என்று விசிக பொதுச்செயலாளரும், எம்பியுமான ரவிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்..

முதல்வர் ஸ்டாலின்
இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.. அதில், "2022 ஜூலையில் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராகத் தமிழர் ஒருவரை நிறுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்முயற்சி எடுக்கவேண்டும். 2024 பொதுத் தேர்தல், 2026 தொகுதி மறுசீரமைப்பு என இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிக்கப்போகும் நிகழ்வுகள் நடக்கும் நேரத்தில் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட எவரும் குடியரசுத் தலைவராகவோ, துணைத்தலைவராகவோ வராமல் தடுக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தலித்துகள்
ரவிக்குமார் இப்படிஒரு கோரிக்கையை வைக்க காரணம் இல்லாமல் இல்லை.. கடந்த 2017-ல் குடியரசு தலைவர் பதவிக்கு ராம்நாம் கோவிந்த் பெயரை வேட்பாளராக பாஜக அறிவித்தது.. அப்போது விசிக தலைவர் திருமாவளவன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "தலித்துகளை குறி வைத்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.. ராம்நாத் கோவிந்த் ஆர்எஸ்எஸ் பின்னணி உடையவர் என்பதால், பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பை தாண்டி எந்தவொரு முடிவையும் எடுப்பது என்பது சந்தேகம்தான்.. ராம்நாத் கோவிந்த் தலித் என்றபோதும், பாஜகவின் அறிவிப்பை வரவேற்கவோ, அல்லது மகிழ்ச்சியடையவோ இயலாத நிலையில் விசிக உள்ளது.. அதேசமயம் பாஜகவின் சதி முயற்சியை முறியடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் அறிவிப்பு இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

பேட்டி
திருமா அப்போது தந்த பேட்டி, பெரும் அதிர்வை தமிழகத்தில் ஏற்படுத்தியது.. திருமா சொல்வது நியாயமே என்ற சிந்தனையும் மக்களின் மனதில் எழுந்தது.. எனினும் பாஜக தன்னுடைய முடிவை மாற்றி கொள்ளவில்லை.. இப்போதும் ஆர்எஸ்எஸ் பின்புலம் இல்லாத ஒரு வேட்பாளரை விசிக கோருகிறது.. விசிகவின் பிரதான கொள்கையே சனாதன எதிர்ப்பு என்பதுதான், பாஜகவின் கொள்கைகளையும் எதிர்ப்பதில் முதல் ஆளாக இருந்து வருவதும் விசிகதான்.. அந்தவகையில்தான், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்த முயற்சிக்க வேண்டும் என்று ரவிக்குமார் எம்பி கேட்டுள்ளது நியாயமான மற்றும் தவிர்க்க முடியாத கோரிக்கையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications