"தவறு".. திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. நாதக ஹிம்லர் மீதான தாக்குதல்- திருமாவளவன் விமர்சனம்
சென்னை: நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் மேடையில் ஏறி சண்டை போட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் மேடையில் ஏறி மோதலில் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரியில் நடந்த நாம் தமிழர் கூட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பங்கேற்றார்.
அரசுக்கு எதிராக இவர் கருத்துக்களை வைத்து வந்தார். அப்போது முதல்வர் பற்றி இவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் கீழே இருந்த திமுக நிர்வாகிகள் இதை பார்த்து கொதித்து போனார்கள்.

மோதல்
இதையடுத்து அங்கு இருந்த திமுக நிர்வாகிகள் சிலர் உடனே மேடை மீது ஏறி மோதலில் ஈடுபட்டனர். அதில் ஒரு நிர்வாகி ஹிம்லரை அடிக்க பாய்ந்தார். ஆனால் ஹிம்லர் அப்படியே பின்பக்கம் ஒதுங்கினார். இது வீடியோவாக வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் இணையம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவினர் நாம் தமிழர் கட்சியினர் இடையே இணையத்தில் பெரிய மோதலை ஏற்படுத்தி உள்ளது.

தவறு
இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்பி திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், அந்த சம்பவம் தவறானது. அதை திமுக தலைமை ஒருபோதும் அங்கீகரிக்கும் நிலையை நாம் பார்க்கவில்லை. நாம் தமிழர் அவதூறு பேசியதை அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் தன்னியல்பாக எதிர்த்தாக சமூக வலைத்தளங்களில் திமுகவினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

கருத்து முக்கியம்
இருந்தாலும் கூட கருத்துக்கு கருத்துதான் முன் வைக்கப்பட வேண்டும். வன்முறைகள் கூடாது. இந்த சம்பவத்தில் திமுக தலைமைக்கு உடன்பாடு இருக்காது என்று நான் நம்புகிறேன். அரசு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் விளக்கம்
கருத்தை கருத்தாகவே அரசியலில் எதிர்கொள்ள வேண்டும். கருத்துதான் அரசியலில் முக்கியம். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல, என்று விசிக எம்பி தலைவர் எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications