விதி விலக்காக பாஜகவினரை விசிகவில் சேர்த்து இருக்கிறோம்..எதற்காக தெரியுமா? திருமாவளவன் சொன்ன விளக்கம்
சென்னை: பாஜகவில் இருந்து விலகிய கிறிஸ்துவ மத போதகர்கள் இருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டதாகவும், பிஜேபியிலிருந்து விலகி வரக் கூடியவர்களுக்கு விசிகவில் இடமில்லை என்பது ஏற்கனவே அறிவித்ததாகும். இருந்தாலும் இந்த இணைப்பு விதி விலக்காகும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருபவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன். பாஜக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் அங்கம் வகிக்க மாட்டோம் என்று பலமுறை மேடைகளில் நேரடியாகவே திருமாவளவன் பேசி வருகிறார்.

பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் குறித்தும் கடுமையான திருமாவளவன் பேசி வருகிறார். மேலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிப்பதாகவும் அதற்கு அதிமுக இடம் கொடுக்கக் கூடாது என்றும் தொல் திருமாவளவன் கூறி வருகிறார்.
திருமாவளவனை தமிழக பாஜக தலைவர்களும் கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுப்பதுண்டு. பாஜகவில் இருந்து விலகி வருபவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று தொல் திருமாவளவன் அறிவித்ததாகவும் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், கோவை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொள்ளாச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் , தொல் திருமாவளவன் முன்னிலையில் பாஜகவில் இருந்து விலகிய 200-க்கும் மேற்பட்டவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். கோவை தெற்கு மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான். ஜெயக்குமார் தலைமையில் பாஜகவினர் இணைந்து கொண்டனர். பாஜகவில் இருந்து விலகிய விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து கொண்டவர்களை தொல் திருமாவளவன் சால்வை அணிவித்து கட்சியில் சேர்த்துக்கொண்டார்.

இந்த நிலையில், பாரதிய ஜனதாவில் இருந்து விலகி வந்தவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைப்பது இல்லை என்று ஏற்கனவே அறிவித்து இருக்கிறோம். ஆனாலும் விதி விலக்காக பொள்ளாச்சியில் இருவரை கட்சியில் இணைத்து இருப்பதாகவும் அது ஏன் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது டிவிட் பதிவில் கூறியுள்ளார். இது தொடர்பாக தொல் திருமாவளவன் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-
பிஜேபியிலிருந்து விலகி வரக் கூடியவர்களுக்கு விசிகவில் இடமில்லை என்பது ஏற்கனவே அறிவித்ததாகும். எனினும் இன்று பொள்ளாச்சியில் கிறித்தவ போதகர்கள் இருவரை இணைத்துக் கொண்டோம். மேடைக்கு வந்தோரை, குறிப்பாக- சிறுபான்மையினரை அரவணைப்பது எமது கடமையல்லவா? இந்த இணைப்பு விதிவிலக்கு ஆகும்" என்று கூறியுள்ளார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
தவெகவுக்கு தாவிய.. அதிமுக எம்எல்ஏக்களின் செயல் அர்த்தமற்றது! - கொந்தளித்த விசிகவின் பாலாஜி -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார்












Click it and Unblock the Notifications