'ஒன்றும் தெரியாமல் உளறிக்கொண்டிருக்கும் சீமான்..' ஆணவ கொலை குறித்த சீமான் பேச்சை விளாசும் வன்னி அரசு
சென்னை: இந்தியாவில் நடைபெறும் ஆணவப் படுகொலைகள் ஏன் நடக்கிறது என்பது குறித்து எதுவும் தெரியாமல் சீமான் உளறிக் கொண்டிருப்பதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு சாடியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருப்பது ஜெய் பீம் சர்ச்சை தான். ஒருபுறம் படம் பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வரும் நிலையில், சர்ச்சைகளும் தொடர்ந்து அணி வகுத்து நிற்கிறது.
இந்நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதிலை விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜெய் பீம் சர்ச்சை
தீபாவளி சமயத்தில் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வெளியான போதே நடிப்பு, கதைக் கரு, படம் எடுக்கப்பட்ட விதம் ஆகியவற்றுக்காகப் பலரும் புகழ்ந்தனர். படம் வெளியானது முதலே ஜெய் பீம் திரைப்படம் பல சர்ச்சைகளைக் கிளப்பி வந்தது. அவை கடந்த சில நாட்களாகப் பூதாகரமாகியுள்ளது

சீமான் பர்ஸ் மீட்
இதனிடையே இது குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதிலை விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில் வன்னியச் சங்க தலைவராக இருந்த ஜெ. குரு வன்னியச் சங்க மாநாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசியது தொடர்பாகச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குச் சீமான் நேரடியாகப் பதில் அளிக்காமல் வேறு எதோ சொல்கிறார்.

அவர் அப்படி தான் பேசுவார்
செய்தியாளர் மீண்டும் அந்த கேள்வியைக் கேட்கவே, "அவர் ஒரு சாதி சங்க தலைவர். அவர் அப்படி தான் பேசுவார். அதில் என்ன குறை உள்ளது, கன்னியாகுமரியில் ஜெ. குரு பேசுவதாலா ஆணவ கொலை நடக்கிறது" என்று பதிலுக்குக் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாகச் சீமானை வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.

உளறும் சீமான்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது என்பது தான் #இந்துத்துவக்கட்டமைப்பு. சாதி மீறி திருமணம் செய்தால் படுகொலை செய்கிறது மநுவாதம். அதன் பெயரே #ஆணவப்படுகொலை.இந்த இந்துத்துவக்கருத்தியலே இந்தியா முழுக்க படுகொலை செய்யத்தூண்டுகிறது. இதுகூட தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கிறார்" என்று சீமானை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
Recommended Video

கோவிந்தன்
முன்னதாக உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பார்வதிக்குக் கடைசி வரை உறுதுணையாக இருந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தன். இருப்பினும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்தனை அந்த படத்தில் வன்னியராக அடையாளம் காட்டப்படவில்லை என திடீரென சர்ச்சை கிளம்பியது. அதற்கு அவர், "நான் கம்யூனிஸ்ட். என்னை வன்னியர் என்றோ, படையாட்சி என்றோ சொல்லிச் சாதி அரசியலுக்குள் சுருக்காதீர்! " என பளீச் பதிலடி கொடுத்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications