காங்கிரசை விட நாங்க பெரிய கை.. 20 சீட் உறுதியாக வேண்டும்.. திமுகவை நெருக்கும் விசிக.. போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் திமுக கூட்டணியில் அதற்கு உள்ளாகவே பதற்றத்தை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ் ஏற்கனவே திமுகவுடன் பேச்சுவார்த்தையைத் துவங்கிய நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) 20 தொகுதிகளைக் கோரியுள்ளது. காங்கிரஸை விடத் தங்களுக்கு வலுவான அடித்தளம் உள்ளதாகவும் விசிக கூறுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய சில நாட்களிலேயே அடித்து ஆட தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்திக்கிறார். விஜயிடம் பேசுகிறார். அதேபோல் விஜயை பாராட்டி போஸ்டுகளை செய்கிறார்.

காங்கிரஸ் திமுகவிற்கு பிரஷர்

இன்னொரு பக்கம் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தலுக்கான விருப்ப மனுக்களை இப்போதே பெற தொடங்கிவிட்டார். அவர், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது, என்று அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாத யாத்திரை மேற்கொள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பணிகளை செய்ய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை, பிரியங்கா காந்தியின் பேரணிக்கான பணிகளை ஒருங்கிணைக்க மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் பெரிய அளவில் கூட்டணிக்கான திட்டங்களை ராகுல் வகுத்து வரும் நிலையில் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திமுகவிடம் அதிக இடங்களை கேட்கும் காங்கிரஸ்

இதன் மூலம் காங்கிரசின் பவரை நிரூபணம் செய்து, திமுகவிடம் அதிக இடங்களை கேட்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது காங்கிரஸ், மூன்று விதமான பார்முலாக்களை முன்மொழிந்துள்ளது. இதை கேட்டு திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம். 75 சட்டமன்றத் தொகுதிகள்; அல்லது 40 தொகுதிகளுடன் அமைச்சரவைப் பதவிகள்; அல்லது 30 தொகுதிகளுடன் ஐந்து மாநிலங்களவை இடங்கள்.

இக்கோரிக்கை, தமிழக அரசியலில் நிலைபெறவும், திமுக கூட்டணியின் மூலம் தனது இருப்பைப் பலப்படுத்தவும் காங்கிரஸின் திட்டத்தை வெளிப்படுத்துகிறது. 75 தொகுதிகள் காங்கிரஸை முக்கிய காட்சியாகும் அல்லது 40 தொகுதிகள் மற்றும் அமைச்சரவைப் பதவிகள் சட்டமன்ற, நிர்வாக அதிகாரங்களைச் சமநிலைப்படுத்தும். திமுக பெரிய எண்ணிக்கையை மறுக்கும் பட்சத்தில், 30 தொகுதிகளுடன் 5 மாநிலங்களவை இடங்கள் மாற்றுத் திட்டமாகும்.

விசிகவும் அதிக இடம்

இதையடுத்து விசிகவும் திமுகவிடம் அதிக இடங்களை கேட்க ஆலோசனைகளை செய்து வருகிறதாம். விசிக கட்சி வட்டாரங்களின்படி, விசிக தனது செல்வாக்கை மாநிலத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் விரிவுபடுத்தத் தீவிரமாகச் செயல்படுகிறது. பட்டியலின மக்களின் கட்சி என்ற பிம்பத்தைத் தகர்த்து, அனைத்து சமூகங்களுக்குமான கட்சியாகத் தன்னை நிலைநிறுத்த விசிக முயல்கிறது. அதன் மாவட்டச் செயலாளர்களில் 10%க்கும் அதிகமானோர் பிற சமூகங்களிலிருந்து நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணியில் காங்கிரஸை விடத் தங்களுக்கு அதிக செல்வாக்கு என விசிக வாதிடுகிறது. தலித் விவகாரங்களில் திமுக உடன் நாங்கள் அங்கமாக நின்றோம். எங்கள் மீதான விமர்சனத்தை கூட பொருட்படுத்தாமல் உங்களுடன் நின்றோம். நாங்கள் 80 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்களைக் கொண்டிருப்பதால், 2026 தொகுதிப் பங்கீட்டில் பெரிய பங்கு வேண்டும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசாங்கத்தில் ஒரு பங்கு வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரவிருக்கும் தேர்தலில் இரட்டை இலக்கத் தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாகவும், குறைந்தது 20 தொகுதிகளை திமுக தலைமையிடம் கோருவோம் என்றும் விசிட் வட்டாரங்கள் கூறுகின்றன. காங்கிரசை விட நாங்கள்தான் பலமான கட்சி என்று கூறி அதிக இடங்களை கேட்க விசிக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+