ஆதவ் அர்ஜுனா மீது பாய்ந்தது ஆக்சன்! திருமாவளவன் அதிரடி! 6 மாதத்திற்கு விசிக-வில் இருந்து சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை 6 மாத காலத்திற்கு இடைக்காலமாக கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய், திமுகவை விமர்சித்து பேசிய பிறகு புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என திருமாவளவன் கூறினார்.

aadhav arjuna vck thirumavalavan

இந்நிலையில் அந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விசிக துணை பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ஆதவ் அர்ஜூனா ஏற்பாட்டில் நடந்த விழாவில் விஜய் கலந்து கொண்டார். இதில் பேசிய விஜய், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க விடாமல் திருமாவளவனுக்கு கூட்டணி அழுத்தம் தரப்பட்டதாகவும் விஜய் குறிப்பிட்டார்.

அதே மேடையில் விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், பிறப்பால் முதலமைச்சரை உருவாக்கும் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என திமுகவை கடுமையாக சாடியிருந்தார். கூட்டணிக்குள் இருக்கும்போதே, திமுகவை வெளிப்படையாக விமர்சித்து பேசியது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆதவ் அர்ஜுனாவின் கருத்து 100% தவறானது என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். ஆதவ் அர்ஜூனா கட்சி நலனுக்கு எதிராக பேசி வருவதாக நிர்வாகிகள் தலைமையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். விசிகவில் துணை பொதுச் செயலாளர் நிலையில் உள்ள நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டு குறித்து உயர் மட்ட குழு தான் முடிவு செய்யும். அதன்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரைவில் முடிவு செய்து அறிவிப்போம்.” என்று தெரிவித்திருந்தார்.

aadhav arjuna vck thirumavalavan

இந்நிலையில், விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிகவித்துள்ளார். விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு பின்வருமாறு:

1. கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜூனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை கவனத்துக்குத் தெரியவந்தது.

2. இது குறித்து கடந்த 7-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

3.கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா அவர்கள் மீக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

6. அதன்படி, ஆதவ் அர்ஜுனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இவ்வாறு அறிவித்துள்ளார் திருமாவளவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+