சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதான் திருமா.. கொல்லப்பட்ட சரஸ்வதி வீட்டுக்கு சென்ற ரவிக்குமார்.. நேரில் ஆறுதல்.. ரூ.1 லட்சம் உதவி

திருமாவளவன், விசிகவினர் கள்ளக்குறிச்சி சரஸ்வதி குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: உளுந்தூர்பேட்டை சரஸ்வதி மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. அத்துடன் பாதிக்கப்பட்ட சரஸ்வதி குடும்பத்துக்கு, ஓடோடி சென்று நிதியுதவி அளித்து, ஆறுதலையும் தந்துள்ளார் அக்கட்சியின் எம்பி.ரவிக்குமார்..!

கடந்த வாரம் முழுவதும் உளுந்தூர்பேட்டை சரஸ்வதியின் கொலை பரபரப்பாக பேசப்பட்டது.. இந்த பெண்ணுக்கு 18 வயதுதான் ஆகிறது.. நர்ஸிங் படித்துள்ளார்.. 21 வயது இளைஞரை காதலித்துள்ளார்.. இருவரும் வேறு வேறு சமூகம்.

வீட்டில் விஷயம் தெரிந்துவிட்டது.. அதனால், மகளை குடும்பத்தினர் கண்டித்தனர், அத்துடன் வேறு ஒரு சொந்தக்கார பையனுக்கு கல்யாணம் செய்து வைக்கவும் ஏற்பாடு செய்தனர்.

வெறியன்

வெறியன்

இதை கேள்விப்பட்ட அந்த காதலன் வெறியனாக மாறி விட்டான். நடுராத்திரியில் சரஸ்வதியிடம் வந்து தகராறு செய்து, அவரை படுகொலையும் செய்துவிட்டார்.. சடலத்தை பாத்ரூமிலும் வீசிவிட்டு தலைமறைவானார்.. இறுதியில், காதலன் உட்பட 3 பேரை போலீசாரும் கைது செய்துவிட்டனர்.

திமுக

திமுக

சரஸ்வதியின் கொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.. இந்த சம்பவம் திமுக தலைவர் முக ஸ்டாலினின் காதுகளுக்கும் எட்டியது.. குற்றவாளிகள் எந்த வகையிலும் தப்பிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்..

சரஸ்வதி

சரஸ்வதி

அதுமட்டுமல்லாமல், படுகொலை செய்யப்பட்ட சரஸ்வதி குடும்பத்துக்கு உடனடியாக உதவும்படியும் உத்தரவிட்டார்.. அவரது உத்தரவுபடியே, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான தா.உதயசூரியன் மற்றும் உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் ஏ.ஜே. மணிக்கண்ணன் உள்ளிட்ட திமுகவினர் சரஸ்வதி குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னார்கள்.

திருமா

சமூக ஒற்றுமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விசிக தலைவர் திருமாவளவன் சரஸ்வதி படுகொலைக்கு கடுமையான கண்டனத்தை உடனடியாக பதிவு செய்தார்.. "#தேவியானந்தல்_சரஸ்வதி படுகொலையை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிட வலியுறுத்துகிறேன்.சரஸ்வதியை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

ஆறுதல்

இதையடுத்து, விசிக பாராளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் உட்பட கட்சியின் முனன்ணி பொறுப்பாளர்கள், படுகொலை செய்யப்பட்ட சரஸ்வதி குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஆறுதல் சொல்லியதுடன், ஒரு லட்சம் ரூபாய் அந்த குடும்பத்துக்கு வழங்கினார்.

English summary
VCK Thirumavalavan consoles Kallakurichi murdered young girl Saraswathis family
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X