பேசக்கூட தடை போடும் பாஜக! இனி 'ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான்’ தானா? விளாசும் விசிக தலைவர் திருமாவளவன்!
சென்னை : நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது என பட்டியலை வெளியிடும் பாஜக, ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான், பாரத் மாதா கி ஜே என்ற வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த வேண்டும் என்று புத்தகத்தை வெளியிட வாய்ப்புள்ளது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மக்களவை செயலர் அவை நாகரிகமற்ற வார்த்தைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த பட்டியலுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகவும், மீறி பயன்படுத்தினால் அவைக் குறிப்பிலிருந்து அந்த வார்த்தைகள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார்த்தைகளுக்கு தடை
மேலும் நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளின் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஆங்கில அகர வரிசையில் அவை பட்டியலிடப்பட்டுள்ள அந்த பட்டியலில்,"40 வார்த்தைகளும் சில சொற்றொடர்களும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலுக்கு பின்னணியில் முழுக்க முழுக்க பாஜகவே இருப்பதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகளும், மத்திய பாஜகவை விமர்சித்துள்ளது.

அவைக்குறிப்பில் நீக்கப்படும்
அந்த பட்டியலில், ஜூம்லாஜீவி, பால் புத்தி, கோவிட் ஸ்ப்ரெட்டர், ஸ்நூப் கே உள்ளிட்ட இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் ப்ளட்ஷெட், ப்ளட்டி, பிட்ரேட், அஷேம்ட், அப்யூஸ்ட், சீட்டட் ஆகிய வார்த்தைகளும் இந்தியில் சம்சா, சம்சாகிரி, சேலாஸ் போன்ற வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வார்த்தைகள் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தினால் அவை நாடாளுமன்றத்தின் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

விசிக திருமாவளவன்
இந்நிலையில், பாஜக, ஜெய் ஸ்ரீராம் போன்ற வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த வேண்டும் என்று புத்தகத்தை வெளியிட வாய்ப்புள்ளது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என பட்டியலை நாடாளுமன்ற சபாநாயகர் வெளியிட்டுள்ளார். அப்படியென்றால், ஜெய்ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜே உள்ளிட்ட வார்த்தைகளை தான் பயன்படுத்த வேண்டுமா என்பது குறித்தும் விளக்க வேண்டும்.

கடுமையாக விமர்சனம்
பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளை அறிவிக்க வேண்டும். இவ்வகையான நடவடிக்கை எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரிக்கும் செயலாக உள்ளது. நாடாளுமன்றத்தில் பாலியல் தொல்லை என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்றால் பாலியல் தொல்லையை அனுமதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுவார்களா என்றும் விளக்க வேண்டும்" என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications