"அம்மா.. தம்பிக்கு என் ஞாபகமே இருக்கறது இல்லை".. திருமா போட்ட அக்காவின் கேஷுவல் போட்டோ!
திருமாவளவன் தன் அக்கா பற்றி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "நீ வந்தால்தான்..ம்மா தம்பி இங்க வர்றது.. மத்தபடி என் ஞாபகமே இருக்காதும்மா.." இப்படி உணர்ச்சிமிகுந்த வரிகளுடன் ஒரு ட்வீட் போட்டுள்ளார் திருமாவளவன்.. அத்துடன் தன்னுடைய அக்காவின் கேஷூவல் போட்டோ ஒன்றையும் ஷேர் செய்திருக்கிறார்... இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விசிக தலைவர் திருமாவளவனின் அக்காள் பானுமதி தொற்று காரணமாக சமீபத்தில் உயிரிழந்துவிட்டார்.. இதனால் திருமாவளவனுக்கு ஆறுதல் சொல்ல கட்சி தொண்டர்கள் தினமும் அங்கனூருக்கு வந்து சென்றபடியே இருந்தனர்..

எனவே, தொண்டர்களின் உடல்நலத்தில் அக்கறை கொண்ட திருமாவளவன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து ஒரு கடிதமும் எழுதியிருந்தார்.. அதில், "ப்ளீஸ்.. ப்ளீஸ்... கெஞ்சி கேட்கிறேன்.. என்னை தேடி யாரும் அங்கனூர் வர வேண்டாம்" என்று உருக்கமாகவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அக்கா இறந்து இத்தனை நாள் ஆகியும் இன்னும் திருமாவளவன் அந்த துக்கத்தில் இருந்து மீளவே இல்லை.. சடலத்தை பார்த்ததுமே கதறி கதறி தலையில் அடித்து கொண்டு அழுதது அனைவரின் நெஞ்சையும் பிசைந்துவிட்டது.. இதை கண்ட அனைவருக்குமே மனம் கலங்கிவிட்டது.
இன்றுகூட ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில் "சென்னைக்கு அம்மா வரும்போது மட்டும்தான் எப்போதாவது அக்கா வீட்டுக்குப்போய் சிலநிமிடங்கள் இருப்பதுண்டு. "நீ வந்தால்தான் அம்மா, தம்பி வீட்டுக்கு வருவார். மற்ற நாட்களில் என்னைப்பற்றிய ஞாபகமே இருக்காதும்மா. கட்சி அலுவலகத்துக்கு வரும்போது நானாகத்தான் போய் அவரைப் பார்ப்பேன்." --அக்கா... என்று பதிவிட்டுள்ளார்.
இத்துடன் ஒரு போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.. அதுதான் அவரது அக்கா வீடு போல இருக்கிறது.. அக்கா வீட்டுக்கு திருமாவும் வந்திருக்கிறார்.. அப்போதுதான் அம்மாவை பார்க்க திருமா அங்கு சென்றிருக்கிறார்.. சோபாவில் திருமாவும், அவரது அம்மாவும் உட்கார்ந்திருக்க, தரையில் அவரது அக்கா உட்கார்ந்திருக்கிறார்.

பார்ப்பதற்கே ரொம்ப கேஷுவலாக இருக்கிறது இந்த படம். அதேசமயம், திருமாவின் அக்கா பாசம் அபரிமிதமாகவே தெரிகிறது.. அக்காவின் இழப்பில் இருந்து மீண்டு வர திருமாவளவனுக்கு இன்னும் காலம் பிடிக்கும் என்றே தெரிகிறது.
உண்மைதான்.. எப்பவுமே அக்காவும் நமக்கு இன்னொரு ஒரு அம்மா மாதிரிதானே!
-
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications