தயவுசெய்து தடுத்து நிறுத்துங்க! திடீர் கோரிக்கை வைக்கும் திருமாவளவன்! முதல்வருக்கு பறந்த கோரிக்கை!
சென்னை : தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதில் தமிழ்நாடு காவல்துறை மெத்தனமாக இருப்பது என்சிஆர்பி அறிக்கையில் தெரியவந்துள்ள நிலையில், இதை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண மையத்தின் 2021ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்களின் ஆதரவோடு சாதிய வன்கொடுமைகள் நடந்தன. திமுக ஆட்சியில் அந்த நிலை நீடிக்கக் கூடாது. முதல்வர் உறுதியோடு அதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

வன்கொடுமைக் குற்றங்கள்
தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிராக 2019-ஆம் ஆண்டில் 1144 குற்றங்கள் நடந்திருந்தன. 2020-ஆம் ஆண்டில் 1274 வன்கொடுமைக் குற்றங்கள் நிகழ்ந்தன. 2021-இல் தலித் மக்கள் மீதான வன்கொடுமைக் குற்றங்களின் எண்ணிக்கை 1377ஆக உயர்ந்திருக்கிறது. 2021இல் தமிழகத்தில் 53 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 61 தலித்துகளைக் கொலைசெய்ய முயற்சி நடந்துள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவில் தலித் படுகொலைகளில் 2020ஆம் ஆண்டு 5-ஆவது இடத்தை வகித்த தமிழகம் இப்போது 7-ஆவது இடத்தில் இருக்கிறது.

பாலியல் வன்கொடுமை
தலித் பெண்கள் மீதான தாக்குதலில் துன்புறுத்துவது, கண்ணியக் குறைவாக நடத்துவது போன்ற குற்றங்களைவிடவும் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது தமிழ்நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டில் 123 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக என்சிஆர்பி அறிக்கை தெரிவித்தது. அதில் 88 பேர் 18 வயதுக்கும் குறைவான சிறுமியர். தலித் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் இந்தியாவிலேயே 5-ஆவது இடத்தில் தமிழகம் இருந்தது. 2021ஆம் ஆண்டிலும் 123 பேர் அதில் 89 பேர் சிறுமியர் என்றும் என்சிஆர்பி அறிக்கை தெரிவிக்கிறது.

காவல்துறை மெத்தனம்
தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதில் தமிழ்நாடு காவல்துறை மெத்தனமாக இருப்பது என்சிஆர்பி அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2020இல் பதிவு செய்யப்பட்டு அந்த ஆண்டின் இறுதிவரை புலன் விசாரணை செய்யப்படாமல் இருந்த வன்கொடுமை வழக்குகள் 694 எனத் தெரிவிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டின் இறுதியிலோ 825 வழக்குகள் புலன்விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. 2020ஆம் ஆண்டைவிட 2021ஆம் ஆண்டில் கூடுதலான வழக்குகள் விசாரணையின்றி நிலுவையில் உள்ளன.

தமிழக முதல்வர்
பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சுமார் 40 சதவீதம் வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாக என்சிஆர்பி அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன், 186 வழக்குகள் தவறான தகவல், போதுமான ஆதாரம் திரட்டமுடியவில்லை எனக் காரணம் காட்டி காவல் துறையால் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரியவந்துள்ளது. காவல் துறையின் மெத்தனமான போக்கே வன்கொடுமைகள் அதிகரிப்பதற்குக் காரணம் என்பதை என்சிஆர்பி அறிக்கை புலப்படுத்துகிறது. இதை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தலித் மக்கள்மீதான வன்கொடுமைகளே இல்லாத மாநிலம் என்ற பெருமையைத் தமிழகத்திற்கு உருவாக்கிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications