கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்!
வேடசந்தூர்: தமிழத சட்டசபை தேர்தலில் எந்த கட்சி வென்று ஆட்சியை பிடிக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் தொகுதி வேடசந்தூர் சட்டசபை தொகுதி ஆகும். இந்த தொகுதியில் வெல்லும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்பது கடந்த 50 ஆண்டுகால வரலாறு. வேடந்தூர் தொகுதி ஒரு தீர்க்கதரிசி தொகுதி அல்லது முன்கூட்டியே வெற்றி கணிக்கும் தொகுதி என்றும் அழைக்கலாம்.
வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி, தமிழக அரசியலில் ஒரு முக்கிய தேர்தல் வழிகாட்டியாகப் பார்க்கப்படுகிறது. "தமிழகத் தேர்தல் ஜோதிடர்" என வர்ணிக்கப்படும் இத்தொகுதி, தொடர்ந்து வெற்றியாளர்கள் பக்கமே நின்றது.

1971- ஆம் ஆண்டு முதல், வேடசந்தூரில் வெற்றிபெற்ற கட்சியே மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் தொடர் போக்கு உள்ளது. 1971ல் திமுகவின் பி. முத்துசாமி வெல்ல, திமுக ஆட்சிக்கு வந்தது. 1977 முதல் 1984 வரை அதிமுக வேட்பாளர்களான எஸ்.எம். வாசன், வி.பி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் வெற்றிபெற்றனர். அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார்.
இந்த வழக்கம் 1989லும் தொடர்ந்தது. 13 வருட இடைவெளிக்குப் பின் திமுக ஆட்சிக்கு வந்தபோது, பி. முத்துசாமி (திமுக) மீண்டும் வென்றார். 1991 முதல் 2001 வரை அ.தி.மு.க.வும் திமுகவும் இந்தத் தொகுதியில் மாறி மாறி வெல்ல, வெற்றிபெற்ற கட்சியே அப்போதைய அரசையும் அமைத்தது.
2006 ஆம் ஆண்டில் ஒரு விதிவிலக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் எம். தண்டபாணி வென்றார். ஆனால், திமுக தனிப்பெரும்பான்மை பெறாமல், காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பின்பு, இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முக்கிய திராவிடக் கட்சிகள் இத்தொகுதியைத் தங்கள் வசமே பெரிதும் தக்கவைத்தன.
இதனைத் தொடர்ந்து, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அதிமுக வேட்பாளர்களான எஸ். பழனிச்சாமி, வி.பி.பி. பரமசிவம் ஆகியோர் வெற்றி ற்றனர். இது அதிமுகவின் தொடர் ஆட்சிக்கு வழிவகுத்தது. கடந்த முறை 2021 ஆம் ஆண்டிலும் இந்த தொகுதியில் வென்ற கட்சிதான் ஆட்சியை பிடித்தது. திமுக வேட்பாளர் எஸ். காந்திராஜன், வேடசந்தூர் தொகுதியில் வென்றதால்தான் 10 ஆண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வேடசந்தூரில் அதிமுக சார்பில் வி.பி.பி.பரமசிவம் களமிறக்கப்படுகிறார். அது போல் திமுக சார்பில் டி.சாமிநாதன் போட்டியிடுகிறார்.
விபிபி பரமசிவம்
இவர் 2021 ஆம் ஆண்டு வேடசந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பரமசிவம் ஒரு எலும்பியல் மருத்துவர். இவரது சகோதரர் வி.பி.பி. மகாராஜனும் ஒரு மருத்துவர்தான். இவரது தந்தை வி.பி.பாலசுப்பிரமணியன் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. இவர் 1980 ஆம் ஆணடு முதல் 1988 ஆம் ஆண்டு வரை வேடசந்தூர் எம்எல்ஏவாகவும் 1985 ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை சட்டசபை துணை சபாநாயகராகவும் இருந்தவர்.
திமுக வேட்பாளர் டி.சாமிநாதன்
சாமிநாதனுக்கு வயது 56. இவர் பி.காம் படித்துள்ளார். இவரது ஊர் வேடசந்தூர். இவர் நிதி நிறுவனத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர். சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் காண்கிறார்.
ஏற்கெனவே 5 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தவருடன் புது முகமான சாமிநாதன் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வேடசந்தூருக்கென இருக்கும் ஒரு பேட்டர்ன் திராவிடக் கட்சிகளுக்கு கை கொடுக்கிறதா என்பதை பார்க்கலாம்.
திமுக எம்எல்ஏ எஸ். காந்திராஜன், 1991 ஆம் ஆண்டும், 2021 ஆம் ஆண்டும் வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் 1993 முதல் 1996வரை சட்டப் பேரவை துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications