OC சோறு..சொறி சிரங்கு படை..கஸ்தூரி அட்டாக்! WAIT AND SEE..விடாத வீரலட்சுமி! எண்டு கார்டே இல்லையா?
சென்னை: இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரிக்கு, தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டுமென வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஓசி சோறு என கஸ்தூரி விமர்சிக்க மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வீரலட்சுமி வெயிட் அண்ட் சீ என சவால் விட்டிருக்கிறார்.
ஒரு காலத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிய கஸ்தூரி அதன் பிறகு ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி விட்டுச் சென்றார். இடையே அரசியல் கருத்துக்களை பேசி பரபரப்பு வளையத்துக்குள்ளும் தன்னை வைத்துக் கொள்ளும் வகையில் பேசி வருகிறார்.

இந்த நிலையில் இட ஒதுக்கீடு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து அவருக்கு பணம் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
கஸ்தூரி: இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றிடம் பேசிய கஸ்தூரி," இட ஒதுக்கீடு பெறுபவர்களில் குறிப்பிட்ட சாதியினர் கொலைகாரர்கள்,கொள்ளைக்காரர்கள் என பேசியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவருக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் என கூறிக் கொள்ளும் வீரலட்சுமி கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் கொலை கொள்ளை செய்தவர்கள் என நீங்கள் குறிப்பிடும் சாதிக்காரர்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்ததால் தான் உங்களால் மேக்கப் செய்து கொண்டு நல்ல உடை உடுத்த முடிகிறது எனவும் விமர்சித்திருந்தார்.

வீரலட்சுமி: மேலும் கஸ்தூரிக்கு வாய்க் கொழுப்பு அதிகமாகி விட்டது. அவர் மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வீடியோவில் தெரிவித்து இருந்தார் மேலும் கஸ்தூரி மன்னிப்பு கேட்காவிட்டால் தமது அமைப்பினர் உடன் சென்று அவரது வீட்டில் முற்றுகையிட்டு போராட போவதாகவும் தெரிவித்து இருந்தார் அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
பதிலடி: இந்த நிலையில் இந்த வீடியோவுக்கு நேற்று நடிகை கஸ்தூரி பதிலளித்திருந்தார். அதில்,"வீரத்தை பேருல மட்டும் வச்சிக்கிட்டு ஏற்கனவே சில ஓசி சோறு பேர்வழிகள் திரியுறாங்க..அடுத்து இன்னுமொரு அரமெண்டல்..3 நாள் கெடு..படையோட வந்து போராட்டம் பண்ணுவேன்னு எல்லாம் சொல்லிச்சா ? நான் கூட என்னவோன்னு நினைச்சேன்..சொந்த சொரி சிரங்கு படையச் சொல்லியிருக்கு போல அந்த அம்மா" என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மீண்டும் வீடியோ: இதனால் இந்த விவகாரம் இத்தோடு முடிந்து விட்டது என நெட்டிசன்கள் நினைத்திருந்த நிலையில், இதற்கும் ஒரு வீடியோவை போட்டு பதிலடி கொடுத்துள்ளார் வீரலட்சுமி. அதில்,"தேவதாசி முறை இருப்பதாகவே நினைத்துக் கொண்டு தன்னையும் தேவதாசியாகவே நினைத்துக் கொண்டு சிலர் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..அவர்கள் வேறு யாரும் அல்ல நடிகை கஸ்தூரி தான்.. நீங்கள் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் புரட்சிகரமான கருத்துக்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? சொல்லும் கருத்துக்களை மக்கள் மிகவும் அருவருப்புடன் பார்க்கிறார்கள்.. தமிழ்நாடே உங்கள் கருத்தை விமர்சிக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியினர் மட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என நான் கூறியிருந்தேன்.. போராட்டம் அறிவித்துள்ளேன்.. வருவேன் வெயிட் அண்ட் சீ" என பேசி உள்ளார். இதனால் இந்த விவகாரம் இப்போதைக்கு ஓயாது போல என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications