விஜய் அண்ணா மன்னித்துவிடுங்கள்! என்ன இருந்தாலும் நான் அப்படி பேசியிருக்கக் கூடாது! வீரலட்சுமி வீடியோ
சென்னை: தவெக தலைவர் விஜய் அண்ணா என்னை மன்னித்து விடுங்கள் என்று தமிழக முன்னேற்றப் படை கட்சியின் தலைவராக உள்ள வீரலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். தான் ஒருமையில் பேசியது தவறுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீரலட்சுமி வீடியோவில் கூறியிருப்பதாவது: உங்களை (விஜய்) அரசியல், கருத்தியல் ரீதியாக விமர்சனம் செய்வதில் தவறில்லை. ஆனால் அந்த விமர்சனத்தில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒருமையில் பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் ரசிகை ஒருவர் எனது கண்முன்னே இறந்ததை பார்த்த ஆத்திரத்தில் அவ்வாறு பேசினேன் என விளக்கமளித்துள்ளார்.

தமிழக முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி. இவர் சமூக பிரச்சினைகளுக்காகவும் பெண்கள் எதிரான குற்றங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக செயல்பட்டார்.
கரூர் 41 பேர் பலி
அது போல் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து வீரலட்சுமி கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார். கடந்த மாதம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "விஜய் மீது யாரும் அவதூறு பரப்பவில்லை. நடந்ததைதான் விமர்சிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் தமிழர்களை சுட்டுக் கொன்றதை எதிர்த்து நான் என் கட்சியினருடன் போராட்டம் நடத்தினேன்.
போராட்டம்
அப்போது அந்த போராட்டத்தில் ஒரு கலவரம் நடந்தது. அப்போது நானே என் கட்சி பொறுப்பாளர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். மேலும் அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டதால் என்னையும் கைது செய்ய உத்தரவிட்டதை அடுத்து நானாகவே காவல் நிலையத்தில் சரண்டர் ஆகி, புழல் சிறையில் 20 நாட்கள் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, 10 ஆண்டுகளாக அந்த வழக்கை நடத்தி வெற்றி பெற்றேன்.
ஒளிந்து கொண்ட விஜய்
ஒரு பெண்ணான நானே போராடிய நிலையில் விஜய் ஏன் அங்கிருந்து ஓடி ஒளிந்தாரு, கரூர் சம்பவம் அவரால்தான் நடந்தது. ஒரு கூட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை. ஒரு கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டால் அதற்கேற்ப போலீஸ் குவிக்க மாட்டார்கள். தொண்டர்களும் நிர்வாகிகளும்தான் பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.
விஜய் வந்தார்
காலை 11.30 மணி கூட்டத்திற்கு லேட்டாக விஜய் வந்தார். சரி வந்ததும் நிறைய பேர் உயிரிழக்கிறார்கள் என்பதை விஜய் ரசிகர் ஒருவர் விஜய்க்கு சைகை மூலம் காட்டினார். அதையும் விஜய் பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு அதிகாரி விஜய்யிடம் போய் உயிரிழப்புகளை கூறினார். ஆனால் விஜய் அங்கிருக்கும் மக்களை அங்கிருந்து கலைந்து போக சொல்லாமல் அவர் முதலில் தப்பியோடினார்.
மனிதாபிமானமற்ற செயல்
விஜய் செய்தது மனிதாபிமானமற்ற செயலாகும். விஜய்க்காக 41 பேர் உயிரிழந்த நிலையிலும் அவரது கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடி அரை கம்பத்தில் பறக்கவில்லை. எந்த வாகனம் 41 பேர் காவு வாங்கியதோ அந்த பிரச்சார வாகனத்திற்கு ஆயுத பூஜை கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர்.
கைது செய்யணும்
41 உயிர்களுக்கு நீதி கிடைக்க, இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எந்த தடையும் ஏற்படாதவாறும் , இதனால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நபர்களை கைது செய்ய கோரி காவல் நிலையத்திற்கு வந்துள்ளேன். விஜய்க்கு ரசிகனாக இருப்பவரை தமிழகத்தில் எந்த பெண்ணும் காதலிக்காதீங்கள், திருமணம் செய்யாதீர்கள்.
பெண் கொடுக்காதீங்கள்
அது போல் விஜய்யின் ரசிகைக்கு தமிழகத்தில் யாரும் மாப்பிள்ளை கொடுக்காதீர்கள், எந்த ஆண்மகனும் காதலிக்காதீர்கள். கரூர் மரணங்களுக்காக விஜய்க்கு தமிழக மக்கள் கொடுக்கும் சரியான தண்டனை இதுதான். விஜய் குறித்தும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் வீடியோ வெளியிட்டிருந்தார் வீரலட்சுமி. இந்த சம்பவம் தவெகவினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது.
வீரலட்சுமி வீடியோ
இந்த நிலையில்தான் வீரலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அண்ணன் விஜய் அவர்களுக்கு வணக்கம். உங்களை நான் அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் விமர்சனம் செய்தது எதுவும் தவறு கிடையாது. ஆனால் அந்த விமர்சனத்தை உங்களை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததற்கும், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உரிமையில் பேசியதற்கும், இந்த நேரத்தில் அண்ணன் விஜய் அவர்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
17 வயது சிறுமி
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் மோகூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சௌமியா என்ற சிறுமி உங்களுடைய ரசிகை. 75% தீக்காயங்களுடன் மருத்துவ சிகிச்சை வேண்டி உங்களிடம் வீடியோ மூலம் உதவி கேட்டு இருந்தார். அந்த தங்கையின் சார்பில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாங்களும் உங்களுக்கு எங்களுடைய அமைப்பு சார்பாக கோரிக்கை வைத்தோம். ஆனால் உரிய நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினரோ, விஜய்யோ உதவாததால் என் கண் முன்னே அந்த 17 வயது சிறுமி உயிரிழந்தார். இதனால் எந்த ஒரு பெண்ணுக்கும் இது போன்ற நிலை வரக்கூடாது என்பதற்காக அன்றைக்கு நான் நினைத்தேன்.
கோரிக்கை
அதன் காரணமாகத்தான் உங்களை அப்படி விமர்சிக்க வேண்டிய நிலை உண்டானது என்று கூறினார். இன்று மீண்டும் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். சென்னை ரிப்பன் பில்டிங் அருகே உள்ள அன்னச்சத்திரத்தை சேர்ந்த வகையறாக்கள் இன்றைக்கு தாயும் அவருடைய மகனும் உங்களுடைய தீவிர ரசிகை. கணவரால் கைவிடப்பட்ட குடும்பம். அது அந்த பெண்ணினுடைய மகன் இன்று கல்லூரியில் பீஸ் கட்ட முடியாமல், கல்லூரிக்கு செல்லாமல் அவமானப்பட்டு தேர்வு எழுத முடியாமல் நிற்கதியாக நிற்கிறார். அவர் உங்களுடைய ரசிகர். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். இவ்வாறு வீரலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.
-
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications