''சென்னையில் வீரமங்கை வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்'' முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: சென்னையில் வீரமங்கை வேலுநாச்சியார் நாட்டிய நாடக மன்றத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலில் தொடங்கி வைத்தார்.
சென்னை கலைவானர் அரங்கில் கலை பண்பாட்டுத்துறை, இயல் இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடக தொடக்க விழா நடந்தது.
இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடக விழாவை தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சிவகங்கை சீமையை மீட்டெடுத்த..
வீரம் என்ற மூன்றெழுத்தை தன் மூச்சாக கொண்ட வேலுநாச்சியார், ஆங்கிலேய படையெடுப்பால் கணவரை இழந்ததோடு, நாட்டை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்புடன் செயல்பட்டார். மருது சகோதரர்கள் ஆதரவுடனும், ஹைதர் அலி, கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி வலுவான எதிர்ப்பு படையை உருவாக்கி 7 ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு மாபெரும் வெற்றி பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார்.

வீரப்பெண்மணி வேலுநாச்சியார்
இதனை தொடர்ந்து 1789 ஆம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார். வட இந்திய ஜான்சிராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய முதல் வீரப்பெண்மணி வேலுநாச்சியார் ஆவார். இந்திய விடுதலை வரலாற்றில் வீரம் நிறைந்த வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ஈடாக எவரும் இல்லை. சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் 25.12.1896-ல் இயற்கை எய்தினார்.

இசையார்ந்த நாட்டிய நாடகமாக
இந்திய விடுதலை வரலாற்றில் வீரம் நிறைந்த வேலுநாச்சியாருக்கு ஈடாக எவரும் இல்லை. வேலுநாச்சியாரின் நினைவை போற்றும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை 62 நாடக கலைஞர்கள் மூலம் இசையார்ந்த நாட்டிய நாடகமாக அரங்கேற்ற தமிழக அரசின் கலை-பண்பாட்டுத்துறை, இயல்-இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை முடிவு செய்தது.

இலச்சினை வெளியீடு
அதன்படி, வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடக தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தை தமிழகம் முழுவதும் நடத்தும் வகையிலான இலச்சினையை வெளியிட்டு, நாடகத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் இந்த நாடக நிகழ்ச்சி 21ம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்திலும், 15ம் தேதி ஈரோட்டிலும்,22ம் தேதி திருச்சியிலும், 28ம் தேதி கோவையிலும் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
-
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்












Click it and Unblock the Notifications