அப்பாடா பிறந்தது விடிவுகாலம்.. சென்னை பல்லாவரத்தை சுற்றியுள்ள மக்களுக்கு குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பல்லாவரம் மேம்பாலத்தில் இரு புறமாகவும் இன்று முதல் வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலத்தில் தாம்பரம்- விமான நிலையம் மார்க்கத்தில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் மறுமார்க்கத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியால் தற்போது இரு புறமாகவும் வாகன போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Vehicle transportation to be started in Chennai Pallavaram from today

அதற்கேற்ப பாலத்தில் தடுப்புகள் வைத்து பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்த மேம்பாலத்தில் ஒரு புறம் மட்டும் வாகன போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் இருபுறமாகவும் வாகன போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் எல்லாம் போக்குவரத்து நெரிசலானது குறையும்.

இந்த மேம்பாலத்தில் இரு புறமும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெளியூர்காரர்களுக்கு சென்னை வாழ்க்கை பிடிக்காமல் போவதற்கு முக்கிய காரணமே போக்குவரத்து நெரிசல்தான். இதற்காகத்தான் ஆங்காங்கே மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அது போல் சொந்த போக்குவரத்தை குறைத்துக் கொண்டு பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுரையும் வழங்கப்படுகிறது. இதை கேட்பவர்கள் சிலர் கேட்கிறார்கள். இன்னும் சிலரோ வீட்டில் ஆளுக்கு ஒரு காரில் ஒரே ரூட்டில் வெவ்வேறு அலுவலகங்களுக்கு சென்றுக் கொண்டுதான் வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+