Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேளச்சேரியில் இந்த "மேடம்" யாருங்க.. உச்சிக்கு ஏறிய "காதல்".. அதுக்குனு இப்படியா? கலங்கிய காஞ்சிபுரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் உயிருக்கு உயிரான காதலி அல்லது வேறொரு நபரை காதலி திருமணம் செய்து கொண்டால், அந்த பெண்ணை மறக்க முடியாமல், கடத்தி கொண்டு போய் தாலி கட்டிவிடுவார்கள் சில ஆண்கள்.. ஆனால், இப்போது நடந்து கொண்டிருப்பதுதான் கலிகாலம் ஆச்சே.. எல்லாமே தலைகீழாகிவிட்டது..!!

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பார்த்திபன்.. 31 வயதாகிறது.. நன்றாக படித்தவர்.. ஒரு தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு திருமணமாகிவிட்டது.

Velachery incident and Young woman kidnapped and married her boyfriend in Kancheepuram

கடந்த ஜூலை மாதம், பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.. பிரியாவும் ஒரு கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜியராக வேலை பார்த்து வருகிறார்.

ஆஷா அம்மா : இந்நிலையில், நேற்று வழக்கம்போல், பார்த்திபன் வேலைக்கு கிளம்புவதற்காக, வீட்டிலிருந்து புறப்பட்டார்.. காரில் ஏறி உட்கார்ந்ததுமே, திடீரென ஒரு கும்பல் பார்த்திபனை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச்சென்றது...

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது அம்மா ஆஷா, காரை ஓடிச்சென்று மறிக்க முயன்றார்.. ஆனால், அந்தம்மா மீது காரை மோதிவிட்டு, படுவேகமாக கார் நிற்காமல் சென்றுவிட்டது.. கார் மோதியதில் பலத்த காயமடைந்து ஆஷா அங்கேயே மயங்கி விழுந்தார். இதனிடையே, ஆஷாவின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதற்குள் தகவலறிந்து, பார்த்திபன் மனைவி பிரியா, உடனடியாக இது குறித்து வேளச்சேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தந்தார்.. போலீசாரும் அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை கையில் எடுத்தனர்.. உடனடியாக கிளம்பி, சம்பவ இடத்துக்கு வந்து, அதிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.. பிறகு, பார்த்திபனின் செல்போன் நம்பரையும் வைத்து, சிக்னல் டிரேஸ் செய்தனர்.. அப்போது, காஞ்சிபுரத்தில் பார்த்திபனை அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

செல்போன் சிக்னல்: உடனே, தனிப்படை போலீஸார் காஞ்சிபுரத்துக்கு விரைந்தனர்.. செல்போன் சிக்னல் காட்டியபடி, அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர்.. அங்கே பார்த்திபனை அடைத்துவைத்திருந்தனர்.. உடனடியாக அவரை போலீசார் மீட்டுவிட்டனர்.. அதே வீட்டிற்குள், 4 பேர் நின்று கொண்டிருந்தார்கள்.. அதில், ஒரு பெண் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ந்துபோனார்கள்.

பிறகு, அந்த 4 பேரையும் கைது செய்து விசாரணையை துவங்கினர்... பார்த்திபனை கடத்தியதே அந்த பெண்தான்.. அவர் பெயர் சவுந்தர்யா.. பார்த்திபனின் முன்னாள் காதலி ஆவார்.

இவங்க 2 பேரும் காலேஜில் படிக்கும்போதிருந்தே காதலித்து வந்திருக்கிறார்கள்.. சவுந்தர்யா ராணிப்பேட்டையை சேர்ந்தவர்.. 7 வருடம் காதலித்திருக்கிறார்கள்.. ஆனால், திடீரென 2 பேருக்கும் கருத்து வேறுபாடு வந்துள்ளது.. பார்த்திபனின் பெற்றோரும், சவுந்தர்யாவை திருமணம் செய்ய வேண்டாம் என்று கறாராக சொல்லிவிட்டனர்.

காதல் காதல்: இதனால், கடந்த ஏப்ரல் மாதமே, 2 பேரும் சுமுகமாக பேசி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகுதான், பார்த்திபன் பெற்றோர் பார்த்து வைத்த பிரியாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்..

நல்லதனமாக பேசி பிரிந்துவிட்டாலும்கூட, பார்த்திபனை மறக்க முடியாமல் அவதிப்பட்டார் சவுந்தர்யா.. இன்னொரு பெண்ணை பார்த்திபன் திருமணம் செய்து கொள்வதையும் சவுந்தர்யா விரும்பவில்லை.. இதை தன்னுடைய அம்மாவிடமே அழுது கதறியபடியே இருந்திருக்கிறார் சவுந்தர்யா. ஒருகட்டத்தில், பார்த்திபன் இல்லாமல் வாழவே முடியாது என்ற முடிவுக்கும் வந்துள்ளார். இதற்கு பிறகுதான், பார்த்திபனை கடத்தி சென்று கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

கடத்தல் பிளான்: இந்த கடத்தல் பிளானை, தன்னுடைய வீட்டிலும் சொல்லி உள்ளார்.. மொத்த குடும்பமும் உட்கார்ந்துதான், கடத்தல் பிளான் போட்டுள்ளது.. சவுந்தர்யா அம்மா உமா 50 வயது, மாமா மகன் ராணுவ வீரர் ரமேஷ் 39 வயது, கார் டிரைவர் சித்தப்பா சிவகுமார் 48 வயது, இவர்கள் 3 பேரின் துணையுடன் பார்த்திபனை காரில் கடத்தி உள்ளார் சவுந்தர்யா.

வீட்டிலிருந்து கடத்தி, நேராக காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு பார்த்திபனை அழைத்து சென்றுள்ளனர். அந்த கோயிலில் பார்த்திபனை அழைத்து சென்று, திடீரென கத்தியை எடுத்து மிரட்டி உள்ளார் சவுந்தர்யா..

சாமி முன்னிலையிலும், கத்திமுனையிலும், தனக்கு தாலி கட்டும்படி பார்த்திபனிடம் சொல்லி உள்ளார்.. அப்போது, தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று சொன்னாராம் பார்த்திபன். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சவுந்தர்யாவுடன் சென்றவர்கள் பார்த்திபனை கோபத்தில் தாக்கியதாக தெரிகிறது.

பிறகு அங்கிருந்து காஞ்சிபுரத்திலுள்ள வீட்டில் கொண்டு வந்து அடைத்துவைத்துள்ளனர்.. 4 பேரும் அதே ரூமில் தங்கி இருந்துள்ளனர். அப்போதுதான், போலீஸார் சிக்னல் வைத்து இவர்களை கண்டுபிடித்துள்ளனர்.

இதெல்லாம் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.. ஆயுதங்களால் காயம் விளைவித்தல், கடத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...

அதிரடி கைது: இதற்கு நடுவில், சவுந்தர்யா திடீரென மனமாற்றம் அடைந்துள்ளார். பார்த்திபனுக்காக இவ்வளவு ரிஸ்ட் எடுத்துவிட்டு, தற்போது பார்த்திபனை விட்டு, பிரிந்து விடுவதாக கண்ணீருடன் சொல்லியிருக்கிறாராம்.. இதனால் வேளச்சேரி போலீஸார் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்களாம்..

சட்டத்துக்கு புறம்பான முழுக்க முழுக்க "கிரிமினல்" சம்பவமாகவே இது கருதப்படுகிறது.. அதேசமயம், காலங்கள் பல உருண்டாலும், உயிருக்கு உயிராக நேசிக்கும் "காதலின் வலிமை" மட்டும் இன்றுவரை மனிதகுலத்தில் குறையாமல் உள்ளதையும் கவனிக்க வேண்டி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+