வேளச்சேரியில் இனி "நோ" வெள்ளம்.. மொத்தமாக சாலைகளை உயர்த்த திட்டம்.. வந்தது புதிய தொழில்நுட்பம்!
சென்னை: எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கை தவிர்க்கும் வகையில், வேளச்சேரி நெடுஞ்சாலையின் உயரத்தை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் விரைவில் அதிகரிக்க உள்ளனர்.
சென்னையில் சேரி என்று முடியும் பகுதிகள், பாக்கம் என்று முடியும் பகுதிகள் எல்லாமே ஏரிகள், குளங்கள், நதிகள் கொண்ட நீர் நிலை பகுதிகள் ஆகும். உதாரணமாக காரப்பாக்கம், ஊரப்பாக்கம் எல்லாமே ஒரு காலத்தில் நிறைய ஏரிகள் கொண்ட இடங்கள் ஆகும்.

அதேபோல் வேளச்சேரி போன்ற இடங்களில் மிக அதிக அளவில் நிலப்பகுதிகளை மட்டுமின்றி ஏரிகளை கொண்ட இடம் ஆகும். 100 வருடங்களுக்கு முன்பு வரை கூட இங்கே ஏகப்பட்ட ஏரிகள் இருந்துள்ளன. இவை எல்லாம் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
யார் தவறு: காலப்போக்கில் இந்த நிலங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட காரணம் இவர்கள்தான் என்று எந்த அரசையும் குற்றம் சொல்லிவிட. முடியாது. ஏனென்றால் காலப்போக்கில் எல்லா ஆட்சிகளிலும் இது போன்ற ஆக்கிரமிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன.
பொதுவாக நதிகளுக்கும், யானைகளுக்கும் ஒரு குணம் உண்டு. யானைகளின் பாதைகளை மறைக்க முடியாது. யானைகள் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டினால் யானைகள் வழி மாறி செல்லாது. யானைகள் தாங்கள் எப்போதும் செல்லும் பாதைகளை மாற்றாது, மறக்காது.
அப்படித்தான் நதிகளும். அவை எப்போதும் செல்லும் பாதைகளுக்கு கண்டிப்பாக சென்று விடும். அப்படித்தான் இப்போது வெள்ளம் ஏற்பட்ட சென்னையின் பல பகுதிகள் ஏற்கனவே ஒரு காலத்தில் நதியாக இருந்த பகுதிகள் ஆகும். இப்போது ஆக்கிமிரப்பு காரணமாக வீடுகளாக, குடியிருப்புகளாக மாறி உள்ளன .
குடியிருப்புகள்: உதாரணமாக சென்னையில் தாழ்வான பகுதி என்று கருதப்படும் வேளச்சேரி பகுதியில் கடந்த டிசம்பரில் மிக கனமழை பெய்தது. அங்கே கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. சென்னையின் மற்ற பகுதிகளில் வெள்ளம் 1 நாளில் வடிந்தது. வேளச்சேரியில் மட்டும் வெள்ளம் வடிவதற்கு 2-3 நாட்கள் ஆனது.
வேளச்சேரிதான் இந்த வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கே வெள்ள நீர் வெளியேறும் அமைப்புகள் இருந்தாலும் கூட தாழ்வான பகுதிகள் என்பதால் தண்ணீர் வெளியேறாமல் இருந்தது. இங்கே வெள்ளம் ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்று அங்கே செய்யப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகள் ஆகும்.
சாலையை மாற்ற முடிவு; எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கை தவிர்க்கும் வகையில், வேளச்சேரி நெடுஞ்சாலையின் உயரத்தை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் விரைவில் அதிகரிக்க உள்ளனர். சாலையின் உயரத்தை அதிகரித்து வெள்ளத்தை வெளியேற்றும் சூழலை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். டிப்-ரைசிங் எனப்படும் ஒரு நுட்பம் மூலம் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் பிட்மினஸ் அடுக்குகள் மற்றும் ஈரமான மண் கலவை சாலையின் உயரத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும்.
முதற்கட்டமாக ரூ. 5 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் பாலம் மற்றும் காமாட்சி மருத்துவமனை பாலம் ஆகிய இரு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். அதன்பின் இந்த சாலைகள் உயர்த்தப்படும்.
இதன் மூலம் சாலையின் உயரம் அதிகம் ஆகும். இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்குவது குறையும். அதேபோல் தண்ணீர் எளிதாக வெளியேறுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications