மதம் மாறி திருமணம்: ராகுல் உடன் போவதாக சொன்ன கீர்த்தனா.. போலீஸ் பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மதம் மாறி திருமணம் செய்ததால் மணமகன் குடும்பத்தினரை வெட்டிய சம்பவத்தில் பெண்ணின் தந்தை, தாய் உள்பட உறவினர்கள் 9 பேரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராகுல் உடன் செல்வதாக கீர்த்தனா தெரிவித்த நிலையில், அவரை போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் நாகவாரா பகுதியைச் சேர்ந்த டேனியல் என்பவரின் மகன் ராகுல், அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராவ் என்பவரின் மகள் கீர்த்தனா ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இவர்களின் காதலுக்கு, ராகுலின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த நிலையில், கீர்த்தனாவின் குடும்பத்தார் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மணமகன் பெற்றோர் சம்மதத்துடன் தங்கள் திருமணத்தை நடத்தி முடிக்கும் நோக்கில், இந்தக் காதல் ஜோடி பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்துள்ளது. காதலன் ராகுலுடன் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வேளாங்கண்ணிக்கு வந்தனர். வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ராகுலுக்கும் கீர்த்தனாவுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
திருமணம் முடிந்த பின்னர், மணமக்களும் ராகுலின் குடும்பத்தினரும் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். திருமணம் குறித்த தகவல் அறிந்த கீர்த்தணாவின் குடும்பத்தினர் சுமார் 15 பேர் கொண்ட கும்பல், உடனடியாக பெங்களூரில் இருந்து புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு வந்தனர்.
அவர்கள், ராகுல் குடும்பத்தினர் தங்கியிருந்த தனியார் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து, கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். கையில் வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால், காதலன் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சரமாரியாக வெட்டினர்.
பின்னர், கீர்த்தனாவை பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். மணமகன் ராகுல், அவரது தந்தை டேனியல், சித்தப்பா பிரகாஷ், மற்றும் தாய் கலையரசி ஆகியோர் பலத்த வெட்டுக் காயங்களுக்கு ஆளாகி, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வேளாங்கண்ணி போலீசார், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பெண்ணின் குடும்பத்தார் சென்ற காரை விரட்டிச் சென்றனர். சேஸ் செய்து, கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு பகுதியில் வெங்கோராவ் (30) மற்றும் ராம்நாத் ராவ் (40) ஆகிய இருவரை கைது செய்தனர். மணப்பெண்ணுடன் பெங்களூர் தப்பிசெல்ல முயன்ற பெண்ணின் தாய், தந்தை, உறவினர்கள் உள்பட 9 பேரை வேளாங்கண்ணி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, மதம் மாறி திருமணம் செய்த விவகாரத்தில், வேளாங்கண்ணியில் நடந்த கொலைவெறித் தாக்குதல் மற்றும் பெண் கடத்தல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பெண்ணின் தந்தை, தாய் உள்பட உறவினர்கள் 9 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 9 பேரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராகுல் உடன் செல்வதாக கீர்த்தனா தெரிவித்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் அவரை வீட்டுக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications