வேளாங்கண்ணி ஆலய பெருவிழா.. பெசண்ட் நகர் பக்கம் மாற்றப்பட்ட போக்குவரத்து.. இந்த பக்கம் போகாதீங்க!
சென்னை: சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய பெருவிழா காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளது சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை.
"அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், பெசன்ட் நகர்" ஆண்டு விழா 2024. வருகின்ற 29.08.2024 செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி 08.09.2024 அன்று நிறைவடைகிறது.

29.08.2024 அன்று மாலை 04.30 மணிக்கு கொடியேற்றம் மற்றும் நற்கருணை தேர் ஊர்வவம் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு, 6வது அவென்யூ பி ரோடு, 3வது மெயின் ரோடு. 2வது அவென்யூ வழியாக வந்து 7வது அவென்யூ வழியாக மீண்டும் தேவாலயத்திற்கு திரும்பும்.
ஒரு லட்சம் யாத்ரீகர்கள் / மக்கள் தேவாலயத்திற்கு அல்லது நற்கருணை தேர் ஊர்வலத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற நற்கருணை ஊர்வலம் 01.09.2024 அன்று மாலை 05.30 மணிக்கும். 07.09.2024 அன்று மாலை 05.30 மணிக்கும் நடைபெறும்.
என்ன நடக்கும்?: அங்கு பெரிய தேர் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு 8வது அவென்யூ பீச் ரோடு, 4வது மெயின் ரோடு. 2வது அவென்யூ. 3வது அவென்யூ மற்றும் 7வது அவென்யூ வழியாக மீண்டும் தேவாலயத்திற்கு திரும்பும். சென்னை போக்குவரத்து காவல் துறையினர் பின்வரும் மாற்று வழிகள்:- திருவிக சாலையில் இருந்து பெசன்ட் அவென்யூ சாலை (தியோசபிகல் சொசைட்டி சாலை) வழியாக பெசன்ட் நகர் அல்லது சாஸ்திரி நகர் செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் செல்லும் அதிக கூட்டம் அல்லது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மட்டுமே பாதை மாற்றப்படும்.
போக்குவரத்து மாற்றம்: சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய பெருவிழா காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளது சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை. அந்த வாகனங்கள் பெசன்ட் அவென்யூ, சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது. அதற்குப் பதிலாக டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் (எம்எல் பர்க்) எல்பி சாலையை நோக்கி எம்ஜி சாை பெசன்ட் நகர் 1வது மெயின் ரோடு, சாஸ்திரி நகர் பஸ் டிப்போ. வலதுபுறம், 2வது அவென்யூ வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
வடசென்னையிலிருந்து வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தும் இடங்கள். ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி. அறிஞர் அண்ண அரசு மேல்நிலைப்பள்ளி. பெசன்ட் நகர் மது குறுக்குத் தெரு பெசண்ட் நகர் 2வது பிரதான சாலை பெசன்ட் நகர் 4வது அவென்யு பெசண்ட் நகர் 17வது குறுக்குத் தெரு 2. ECR/OMR லிருந்து திருவான்மிபூர் சந்திப்பு வழியாக அடையார் நோக்கி வரும் அனைத்து வாகணங்களும் வழக்கம் போல் செல்லும் எல்பி ரோடு பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மட்டும், வாகனங்கள் டைடல் பார்க் சந்திப்பு.
ஓஎம்ஆர் வழியாக கோட்டூர்புரம் அல்லது அடையாறு நோக்கி திருப்பி விடப்படும். தென்சென்னை ECR/OMR-லிருந்து வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடம் கலாஷேத்ரா அறக்கட்டளை 3. பொண்ட் நகர் மற்றும் சாஸ்திரி நகர் வாசிகள், 29.08.2024 அன்று மதியம் எதிர்பார்க்கப்படும் கூட்டத்தின் காரணமாக எலியட்ஸ் கடற்கரைப் பயணத்தைத் தவிர்க்கவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தங்கள் தனிப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications