முதல்நாளே கடைக்கு சீல்! பிரியாணி மீது வேலூர் கலெக்டருக்கு வெறுப்பு? சந்தேகம் கிளப்பும் எஸ்.டி.பி.ஐ.!
சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடி பிரியாணி கடை திறக்கப்பட்ட முதல் நாளே மாவட்ட ஆட்சியர் சீல் வைத்ததற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரியாணி அல்லது பிரியாணி கடை நடத்துபவரின் மீதான வெறுப்பால், கோபத்தால் ஆட்சியர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டாரா என்கிற கேள்வி எழுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி தெரிவித்துள்ளது. பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

''வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை ஒன்று திறப்பு விழாவை முன்னிட்டு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் பிரியாணியை வாங்க குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர், மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தராமல் விற்றதாக கூறி கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் கடைக்குள் இருந்த வாடிக்கையாளர்களை காவல்துறையினரை வைத்து வெளியேற்றியுள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அந்த நிறுவனம் மக்களை கவர சலுகைகளை அளிப்பது என்பது வாடிக்கையானது. அந்த சலுகைகள் தங்களுக்கு பிடித்திருந்தால் மக்கள் அதனை நாடி பெற்றுச்செல்வார்கள். அந்த வகையில் தான் காட்பாடியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை சலுகை அறிவிப்பை வெளியிட்டது. நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துவருகின்றன.

சில கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரபலங்களை அழைத்து திறப்பு விழாவை நடத்துகின்றன. அப்போது பிரபலங்களின் ரசிகர்கள் குவிந்து இதைவிட பல மடங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இப்படி இருக்கும் சூழலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பிரியாணி கடைமுன் கூடியதற்காக மாவட்ட ஆட்சியர் பிரியாணி கடைக்கு சீல் வைத்த நடவடிக்கை என்பது ஏற்புடையதல்ல.
பிரியாணி அல்லது பிரியாணி கடை நடத்துபவரின் மீதான வெறுப்பால், கோபத்தால் ஆட்சியர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டாரா என்கிற கேள்வி எழுகிறது. விதிகளை மீறினால் வழக்கு தொடரலாம் அதைவிடுத்து வாடிக்கையாளர்களை காவல்துறையினரை வைத்து விரட்டியடித்து கடைக்கு சீல் வைப்பது சரியான நடைமுறையல்ல. இந்த நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி வன்மையாக கண்டிப்பதோடு பிரியாணி கடைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.'' இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications