சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.. என் கட்சிக்காரராக இருந்தாலும் விடமாட்டேன்.. கமல்ஹாசன் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதால் வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலூரில் திமுக சார்பில் அதன் பொருளாளர் துரைமுருகன், மகன் கதிர் ஆனந்த், புதிய நிதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் நடுவே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

Vellore election should be stop: kamal haasan

பீச்செல்லாம் கலர் பேப்பர்.. கூப்பிடுங்க அந்த பர்த்டே பேபியை.. இந்தா துடைப்பம்.. கலக்கிய கிறிஸ்டோபர்பீச்செல்லாம் கலர் பேப்பர்.. கூப்பிடுங்க அந்த பர்த்டே பேபியை.. இந்தா துடைப்பம்.. கலக்கிய கிறிஸ்டோபர்

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக துரைமுருகன் இல்லம் மற்றும் அவரது கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தினர். அப்போது 10 லட்சத்துக்கும் மேலாக பணம் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் பிறகு வேலூர் அருகே உள்ள ஒரு சிமெண்ட் ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது பல கோடி ரூபாய் கட்டு கட்டாக சிக்கியது . அதில் எந்த வார்டுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்கள் எழுதப்பட்டிருந்தன. இது திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டது.

லோக்சபா தேர்தலில் இவர்களுக்குத்தான் வெற்றியா? .. டைம்ஸ் நவ் - விஎம்ஆர் சர்வே!

வருமான வரி சோதனை காரணமாக வேலூரில் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழக தேர்தல் அதிகாரியிடம் வருமானவரித்துறையினர் இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் கூறுகையில், ஓட்டுக்கு எனது கட்சியினர் பணம் கொடுத்தாலும் நான் அதை காட்டிக் கொடுத்து விடுவேன். பணம் கொடுத்து வாக்கு கேட்பது அவமானம். கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், வேலூர் லோக்சபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
makkal needhi maiam chief kamal haasan says, vellore election should be withdrawn, as money seized from there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X