மோச்சா புயல் மொக்க.. காட்டு காட்டுன்னு காட்டிய ஊமை 'வெயில்'.. இந்த ஊருக்குதான் அதிக பாதிப்பு.. உஷார்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் வேலூர் மாவட்டத்தில்தான் அதிக அளவு வெயில் பதிவாகியுள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு மோச்சா என பெயரிடப்பட்ட நிலையில் தற்போது இது அதிதீவிர புயலாக வலுப்பெற்று 8 கி.மீ வேகத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து சென்றுக்கொண்டிருக்கிறது. அதாவது தென்னிந்தியாவை விட்டு வங்கதேசம், மியான்மரை நோக்கி டிராவல் செய்துக்கொண்டிருக்கிறது.

இன்றைய (மே 13) தேதியை பொறுத்த அளவில் பீகாரிலிருந்து சுமார் 565 கி.மீ தொலைவிலும், வங்கதேசத்திலிருந்து 760 கி.மீ தொலைவிலும், மியான்மரிலிருந்து 690 கி.மீ தொலைவிலும் இப்புயல் நிலைகொண்டிருக்கிறது. இந்நிலையில் இது நாளை (மே.14) மதியம் மியான்மரில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக வடக்கு அந்தமான் பகுதியில் 65 கி.மீ வரை காற்று வீசும். தென்கிழக்கு வங்கக்கடலில் இதன் வேகம் 75 கி.மீ ஆக இருக்கும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்களை போல தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் நற்செய்தி இருக்கிறதா? என்று கேட்டால் வழக்கம்போல இல்லை என்று கைவிரித்திருக்கிறது வானிலை ஆய்வு மைய்யம். தொடக்கத்தில் இந்த புயல் உருவாகும்போது வட தமிழகத்திற்கு கொஞ்சம் மழை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் தலைவர் 'மோச்சா' டாட்டா சொல்லிவிட்டு மியான்மர் போய்க்கொண்டிருப்பதால் தமிழ்நாடு பக்கம் இருந்த கொஞ்ச நஞ்ச மேகங்களும் கூடவே சென்றுவிட்டது என வானிலை மையம் கூறியுள்ளது.

பொதுவாக ஒரு இடத்தில் புயல் உருவாகிறது எனில் அந்த இடத்தை சுற்றியுள்ள மேகங்களை உறிஞ்சிக்கொண்டு புயல் வலிமையடையும். தற்போது மோச்சாவும் இதே வேலையைதான் பார்த்திருக்கிறது. இதில் கவலையளிக்கக்கூடிய விஷயம் என்னவெனில் இந்த புயல் அதிதீவிர புயலாக உருப்பெற்றிருக்கிறது என்பதுதான். இதன் அர்த்தம் அடுத்த நான்கு நாட்களுக்கு இந்த பக்கம் மழை இல்லை என்பதுதான். ஏற்கனவே அக்னி வெயில் தொடங்காததற்கு முன்னரே தமிழ்நாட்டில் வெயில் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்தது.
இப்படி இருக்கையில் கொஞ்ச நஞ்ச மழை மேகங்களையும் மோச்சா தனதாக்கிக்கொண்டதால் இனி சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெயில் மட்டும்தான் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெயில் எங்கு பதிவாகியுள்ளது என்பது குறித்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெயிலுக்கு பெயர்போன வேலூரில் சுமார் 39.5 டிகிரி செல்ஷியஸ் வெயில் காட்டியுள்ளது. அதாவது 103.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அடித்திருக்கிறது. வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசியுள்ளதால் வேலூர் மக்கள் வாடி வதங்கிபோயுள்ளனர்.
குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 71.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்திருக்கிறது. இந்நிலையில் இன்று வழக்கமான வெப்பநிலையை விட மேலும் 1-2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் கூடுதலாக பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications