தனிமையில் காயத்ரி.. அல்லாடி கதறிய டாக்டர்.. ஜன்னல் வழியே பார்த்த ஹவுஸ்ஓனர்.. ஒரு கண்ணீர் துயரம்
வேலூரில் பெண் டாக்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: பெண் டாக்டர் எடுத்த விபரீதமான முடிவு, மிகுந்த பரிதாபத்தை வேலூர் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.. என்ன காரணம்?
வேலூர் தொரப்பாடி பெரியல்லாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்... இவர் மனைவி காயத்ரி... செல்வகுமார் தூத்துக்குடியை சேர்ந்தவர்.. காயத்ரி கேரளாவை சேர்ந்தவர்..
இருவரும் தொரப்பாடி காந்தி நகரில் ஒரு வீட்டில் குடியிருந்து வந்தனர்.. காயத்ரிக்கு 32 வயதாகிறது.. செல்வகுமாருக்கு 35 வயதாகிறது. 2 பேருமே டாக்டர்கள்.. 2 பேருமே வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் ஒன்றாகவே பணிபுரிந்து வந்தனர்..

தனிமையில் காயத்ரி
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.. இந்நிலையில், சொந்த வேலையாக செல்வகுமார் கடந்த வாரம் டெல்லி சென்றிருந்தாராம்... காயத்ரி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, டெல்லியில் இருந்து காயத்ரிக்கு போன் செய்துள்ளார்.. ஆனால், காயத்ரி போன் எடுக்கவில்லை.. பலமுறை போன் செய்தும், காயத்ரி போன் எடுக்காததால், செல்வகுமார் பதறிப்போய்விட்டார்..

டவுட் ஃபிளைட்
இதனால் சந்தேகம் அடைந்த செல்வகுமார், உடனடியாக ஃபிளைட் பிடித்து கொண்டு நேராக சென்னைக்கே வந்துவிட்டார்.. மீனம்பாக்கத்தில் இருந்து, தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.. இதனிடையே, அந்த வீட்டின் ஹவுஸ் ஓனர், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளார்.. அப்போது, காயத்ரி தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து பதறிப்போய் பாகாயம் போலீசாருக்கு தகவல் சொன்னார்.. அதற்குள் செல்வகுமாரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.. காயத்ரியின் சடலத்தை பார்த்து கதறி கதறி அழுதார்..

போஸ்ட்மார்ட்டம்
விரைந்து வந்த போலீசார், காயத்ரியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. திருமணமான 4 ஆண்டுகளில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, காயத்ரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.. கல்யாணம் ஆகி 4 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத கவலை, டாக்டர் தம்பதி இருவருக்குமே இருந்துள்ளது.. அதனால், இருவருமே மனவருத்தத்திலும், கவலையிலும் இருந்துள்ளனர்..

டியூட்டி டைமிங்
ஒருவருக்கொருவர் வருத்தங்களையும், கவலைகளையும் பரிமாறிக் கொள்ளும் சூழல்கூட இவர்களுக்கு அமையவில்லையாம்.. காரணம், இருவருக்குமான வேலை நேரம் வித்தியாசமானது.. காயத்ரி வீட்டில் இருக்கும்போது செல்வகுமார் ஹாஸ்பிடலுக்கு சென்றுவிடுவாராம்.. செல்வகுமார் வீட்டில் இருக்கும்போது காயத்ரி, ஹாஸ்பிடலுக்கு சென்றுவிடுவாராம்.. இருவருமே வீட்டில் ஒன்றாக இருக்க முடியவில்லை... இது குறித்து காயத்ரி அடிக்கடி செல்வகுமாரிடம் அடிக்கடி புலம்பி வந்துள்ளார்..

சாயங்காலம்
ஒரேநேரத்தில் ஒன்றாக, வீட்டில் இருக்க முடியவில்லையே என்று செல்வகுமாரிடம் உருக்கமாக பேசி வந்துள்ளார்.. இந்த மாதிரி சூழலில்தான், செல்வகுமார் டெல்லி சென்றிருக்கிறார்.. அங்கிருந்து முதல்நாள் காலையில் போன் செய்துள்ளார்.. அவர் போனை எடுக்காததால், தூங்கிக் கொண்டிருப்பார் என்று நினைத்துள்ளார்... அதற்கு பிறகு மறுபடியும் மதியம் 1 மணி போல காயத்ரியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போதும் போனை எடுக்கவில்லை.. பிறகு, அன்று சாயங்காலமே மறுபடியும் போன் செய்துள்ளார்.. அப்போதும் காயத்ரி போனை எடுக்கவில்லை.. ஏற்கனவே மனவருத்தத்தில் காயத்ரி இருந்ததால், செல்வக்குமார் பயந்துவிட்டார்..

ஜன்னல் கம்பி
அதனால்தான் அன்றைய தினமே பிளைட் பிடித்து ஊர் திரும்பி உள்ளார்.. ஆனால், அங்கிருந்து ஃபிளைட் ஏறுவதற்கு முன்பு, ஹவுஸ் ஓனருக்கு போன் செய்து வீட்டில் என்ன ஆச்சு? என்று பார்க்க சொல்லியுள்ளார்.. ஹவுஸ் ஓனரும் வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியுள்ளார்.. ஆனால் கதவு திறக்கப்படவில்லை என்பதால், கடைசியில் ஜன்னலில் எட்டிப்பார்த்துள்ளார்.. அப்போதுதான், சீலிங் பேனில் சடலம் தொங்கி கொண்டிருந்தது கண்ணில் பட்டுள்ளது.. கணவருடன் ஒன்றாக சேர்ந்து இருக்க முடியவில்லை, குழந்தை இல்லை என்ற ஏக்கத்திலும் விரக்தியிலும், கண்ணீரிலுமே காயத்ரியின் உயிர் பிரிந்துவிட்டது...!!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications