Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலியல் வெறியூட்டும் ஸ்மார்ட் போன்! கலாச்சார சீர்கேடு! சீரழியும் இளம் தலைமுறைகள்! வேல்முருகன் வேதனை!

விழுப்புரம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்மார்ட் போன்களால் புகுத்தப்படும் கலாச்சார சீர்கேட்டின் பலனாக, இளம் தலைமுறையினர் சீரழிக்கப்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

பெண்கள் -குழந்தைகள்

பெண்கள் -குழந்தைகள்

பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை இன்று அன்றாட செய்தியாகி விட்டது. அந்த வகையில், விழுப்புரம் அருகே செங்கமேடு பகுதியில் 12ம் வகுப்பு மாணவி, தனது சக பள்ளி மாணவனுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், மாணவனை தாக்கி விட்டு, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த நிகழ்வு கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

விழுப்புரம் நிகழ்வு

விழுப்புரம் நிகழ்வு

பின்னர், மாணவனை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டிவிட்டு வெள்ளிப்பொருட்கள், செல்போன் ஆகியவை பறித்து சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மாணவன், மாணவி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

அச்சத்துடன் பயணிக்கும் நிலை

அச்சத்துடன் பயணிக்கும் நிலை

பிறந்த குழந்தையா, பள்ளி படிக்கும் சிறுமியா, வயது வந்த குமரியா, மனைவியா, குழந்தை பெற்ற தாயா, நரை விழுந்த பாட்டியா என்ற எந்த வயது வித்தியாசமில்லாமல், பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரங்களால் பெண்கள் எப்போதும், ஒருவித அச்சத்துடன் வெளியே பயணிக்கும் நிலையை இந்த ஆணாதிக்க சமூகம் ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் வாழ தகுதியற்ற நாடு

பெண்கள் வாழ தகுதியற்ற நாடு

அச்சத்தோடும், பயத்தோடும் பெண்கள் வாழவே தகுதியற்ற நாட்டில் தான் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கி, உடை சரியில்லை, இரவு நேரத்தில் அங்கு என்ன வேலை, என அவள் நடத்தையின் மீதே சந்தேகப்பட்டு குற்றம் சாட்டுவது இச்சமூகத்தின் பொதுப்புத்தியாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் வளர்ந்து வரும் மற்றொரு அபாயம் ஆபாச இணைய தளங்கள். ஸ்மார்ட் போன்கள், பெண்களின் உடல்களை விதவிதமாக காட்டி, மகளா மனைவியா எனத் தெரியாத அளவிற்கு பாலியல் வெறியூட்டுகிறது.

கலாச்சார சீர்கேடு

கலாச்சார சீர்கேடு

பெண்கள் என்றாலே நுகர்ந்துத் தள்ள வேண்டிய, இன்பம் தரும் பண்டம் என்கிற பொதுப்புத்தியை உருவாக்கி, கல்லாக் கட்டும் முதலாளிகளின் இலாபவெறியால் புகுத்தப்படும் கலாச்சார சீர்கேட்டின் பலனாக, வளரும் தலைமுறையான மாணவர்கள் - இளைஞர்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.

பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கும் குற்றவாளிகள் பெரும்பாலும் போதைக்கு அடிமையாகி இருப்பதும், மது அருந்தி இருப்பதும், பல வழக்குகளில் நாம் காணும் ஒரு நிலை. வீதிதோறும் இருக்கக்கூடிய மதுபானக் கடைகள் ஆண்களின் உயிரை மட்டும் கொல்வதில்லை, பெண்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றது. சாராயம், குட்கா, கஞ்சா விற்று மாணவர்கள் - இளைஞர்களிடம் போதை பழக்கத்தை வேகமாகப் புகுத்தி சீரழித்து வருகிறது.

அதிகரித்து வரும் குற்றங்கள்

அதிகரித்து வரும் குற்றங்கள்

எனவே, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். விழுப்புரம் அருகே செங்மேட்டில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

வேல்முருகன் வேதனை

வேல்முருகன் வேதனை

எதிர் வரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்த நிறுத்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதோடு, பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைத்திட கடுமையாக சட்ட திருத்தங்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+