ரெம்டெசிவிர் மருந்து... அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை தேவை... வேல்முருகன் வேண்டுகோள்..!
சென்னை: ரெம்டெசிவிர் மருந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாகக் கிடைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரெம்டெசிவிர் மருந்துகள் சில தனியார் நிறுவனங்களால் பதுக்கப்படுவதன் காரணமாகவே, அம்மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நாட்டு மக்கள்
நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கொரோனா பேரிடர் காலத்திற்கு எதிராக மருத்துவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர். முதல் அலை ஏற்படுத்திய சேதாரத்தையே தாங்கமுடியாத சூழலில், மேலும் கடுமையான நெருக்கடியை தற்போது இரண்டாவது அலை உருவாக்கியிருக்கிறது.

ரெம்டெசிவிர்
இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்துகள் சில தனியார் நிறுவனங்களால் பதுக்கப்படுவதால், அம்மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், பதுக்கல் காரணமாக கள்ளச்சந்தையில் இந்த மருந்து பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு இந்த மருந்து இலவசமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த மருந்து கிடைப்பதில்லை என்பது வேதனை அளிக்கிறது.

அரசு சார்பில்
ரெம்டெசிவிர் மருந்து தற்போது சென்னையில் மட்டுமே அரசு சார்பில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மருந்தை வாங்குவதற்காக தமிழகம் முழுவதுமிருந்து நோயாளிகளின் உறவினர்கள் சென்னையில் குவியும் நிலை உள்ளது. அதிகாலை முதல் காத்திருந்தாலும் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில்லை. நீண்ட வரிசையில் ஒருசில நாட்கள் காத்திருந்து இந்த மருந்தைப் பெற வேண்டியுள்ளது. இதன் காரணமாக, கொரோனா மேலும் பரவுவதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.

அலைக்கழிப்பு
மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் உள்ளவர்களின் உறவினர்கள் இதனால் பெரும் அலைக்கழிப்புக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.எனவே தமிழக அரசு இந்த மருந்து விற்பனையை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உடனடியாக துவக்குவதோடு, தட்டுப்பாடில்லாமல் தேவைப்படும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications