செவிலியர்கள் நீக்கம்.. தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம்.. தவாக வேல்முருகன் எச்சரிக்கை
சென்னை: கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
செவிலியர்கள் பணி நீக்கம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி இருந்த நேரத்தில், கொரோனா நோய் சிகிச்சை பிரிவில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு எழுதி காத்திருப்பில் இருந்த செவிலியர்களை தமிழ்நாடு அரசு, கடந்த 2020ஆம் ஆண்டு, 14 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் சுமார் 2, 400 செவிலியர் பணி வழங்கி உத்தரவிட்டது.
கொரோனா தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் இரண்டரை ஆண்டுகள், தங்களது உயிரை பணயம் வைத்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கினர். தங்களது குடும்பத்தை கூட கவனிக்க முடியாமல், பல்வேறு சிரமங்களுக்கு இடையே செவிலியர்கள் ஆற்றிய சேவை மகத்தானது.

ஏமாற்றம் அளிக்கிறது
இந்நிலையில், கொரோனா காலத்தில் மகத்தான சேவை ஆற்றிய செவிலியர்கள் பணி நீக்கம் என்ற அரசாணை மிகுந்த வலியையும், வேதனையையும் அளிக்கிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை, மாவட்ட சுகாதாரக் குழுமத்தின் கீழ் தற்காலிக பணியாளர்களாக பணி அமர்த்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

நற்பெயருக்கு களங்கம்
இந்நிலையில், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை நியமித்து பணி நிரந்தரம் செய்யாமல், தற்காலிக செவிலியர்களாக மாற்றும் நடவடிக்கை தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்.

வேல்முருகன் கோரிக்கை
எனவே, மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கொரோனா காலத்தில் மகத்தான சேவையாற்றிய செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார்.

செவிலியர்கள் பணிநிரந்தரம்
செவிலியர்கள் பணிநிரந்தரம் குறித்து மா சுப்பிரமணியன் கூறுகையில், பொது சுகாதாரத் துறையில் 2200 காலி பணியிடங்கள் உள்ளன. மக்களை தேடி மருத்துவத்தில் இடை நிலை சுகாதார சேவைக்காக 270 பேர் தேவை. இது போன்று சுகாதாரத் துறையில் உள்ள காலி பணியிடங்களில் இந்த செவிலியர்கள் நிரப்பப்படுவார்கள். பணிநீட்டிப்பு வழங்கப்படாதவர்களுக்கு காலிபணியிடங்கள் உள்ள இடத்தில் மாற்றுப்பணி வழங்கப்படும் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications