கூட்டுறவு வங்கிகளில் மலைக்க வைக்கும் முறைகேடுகள்... விசாரணைக்கு வலியுறுத்தும் வேல்முருகன்..!
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் நடை பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மோசடி மற்றும் முறைகேடுகள் அனைத்தும் கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்களின் துணையோடு தான் நடந்திருக்கும் என அவர் சந்தேகம் கிளப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்;

அம்பலம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள், 5 சவரன் வரை, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக நிலுவை விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் அரங்கேறியுள்ள மோசடிகளும், முறைகேடுகளும், கூட்டுறவு பதிவாளர் அவர்கள் வெளியிட்டுள்ள கடிதத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

போலி நகைகள்
அதாவது, போலி நகைகள், தரம் குறைந்த நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்ததும், நகையே கொடுக்காமல் நகையை அடமானம் வைத்தது போல் கணக்கு காட்டி பல கோடி ரூபாய் கடன்பெற்றும், வெட்ட வெளிச்சமாகியுள்ளது. குறிப்பாக, திருப்பத்தூரில் ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி 3.5 கிலோ தங்க நகைகளை அடமானம் வைத்ததாக ரூ.74 லட்சம் கடன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை களை பயன்படுத்தி ரூ.70 லட்சம் நகை மோசடி நடந்துள்ளது.

பணியிடை நீக்கம்
சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபர் 2.8 கிலோ நகைகளை அடகு வைத்து ரூ.85 லட்சம் கடன் பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ரூ.2 கோடியே 3 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான 261 நகை பொட்டலங்கள் மாயமாகிவிட்டது. இவ்விவகாரம் தொடர்பாக வங்கி தலைவர் முருகேச பாண்டியன் பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு, கூட்டுறவு சார் பதிவாளர், செயலாளர், துணை செயலாளர் ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முறைகேடுகள்
இது போன்று, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அளவில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் அரங்கேறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தற்போது அதிகாரிகள் நடத்தி வரும் ஆய்வால், நாள்தோறும் கூட்டுறவு சங்க மோசடிகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. மேலும், பயிர்க் கடன்கள் வழங்கப் பட்டதில் 25,733 கடன்களில் 2393 கோடி ரூபாய் தவறாக வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

வலியுறுத்தல்
எனவே, கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் அரங்கேறியுள்ள முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications