"வீர வாள்.." பண்ருட்டி தொகுதியில்.. வேல்முருகனுக்கு திமுக கொடுத்த இன்ப அதிர்ச்சி!
சென்னை: பண்ருட்டி தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வேல்முருகன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூட்டணிக் கட்சியினர் மலர் தூவியும் வீரவாள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Recommended Video
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளரும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிடுகிறார்.
பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் சிறுவத்தூர் கொக்குபாளையம் கட்டியாம்பாளையம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வீரவாள்
அப்போது அங்குசெட்டிபாளையம் பகுதியில் தொண்டர்கள் தூவிய மலர் மழையில் நனைந்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்பு, அம்மன் கோவிலில் வேட்பாளர் வேல்முருகன் வழிபாடு செய்தார். அப்போது பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் வேல்முருகன் வெற்றியை உறுதி செய்யும் வகையில் திமுக ஊராட்சி செயலாளர் சிற்றரசு தலைமையில் திமுகவினர் வீரவாள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கூட்டணி
கூட்டணி கட்சியாக இருந்தபோதும், திமுகவினர் வேல்முருகனுக்கு வீர வாள் கொடுத்தது கவனிக்கத்தக்க அம்சமாக இருந்தது. திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வேல்முருகன் மார்ச் 11ம் தேதி கையெழுத்திட்டனர்.

வேல்முருகன் கோரிக்கை
இதையடுத்து பண்ருட்டி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் வேல்முருகன் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்டு பண்ருட்டி தொகுதி, தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இருமுறை எம்எல்ஏ
மேலும் பண்ருட்டி தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், பண்ருட்டி தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றி இருக்கிறேன். எங்கள் கட்சியின் முதல் சட்டசபை உறுப்பினராக நான் இருக்க வேண்டும் என ஒப்புதல் தந்துள்ளனர் என்றார்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications