போச்சு.. பறிபோகும் எம்.எல்.ஏ பதவி? தவாக வேல்முருகன் மீது பாய்ந்த போக்சோ? வீண் பேச்சால் வந்த விபரீதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மாணவ மாணவிகளை சந்தித்து பாராட்டி பரிசு வழங்கி வருகிறார். இந்த நிலையில் விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவிகளையும் அவர்களது பெற்றோர்களையும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது தேசிய குழந்தைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நிலையில் வேல்முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சட்டமன்றத் தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார்.

தனது சொந்த செலவில் அவர்களை நேரில் வரவழைத்து விருந்து வைத்து, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களை மாமல்லபுரம் வரவழைத்த விஜய் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Velmurugan Vijay tvk

இந்த நிலையில் இதுகுறித்து விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இரண்டு கிராம் தங்கத்துக்காக ஒரு கூத்தாடியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வைக்கின்றனர். இது தமிழனுக்கு அழகா. ஈனப்பிறவிகள்.. என பேசி இருந்தார். வேல்முருகனின் இந்த பேச்சுக்கு தமிழக வெற்றிக்கழகத்தினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தான் பேசியது சரிதான் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறி இருக்கிறார் வேல்முருகன்.

இதற்கிடையே வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுமிகளை ஆபாசமாக பேசியதாக வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் ஆணையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பியது தமிழக வெற்றிக்கழகத்தின் வழக்கறிஞரான ஆதித்ய சோழன் என்பவர் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு சபாநாயகர் ஆகியோருக்கும் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவு தபால் மூலம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆதித்யா சோழன் அனுப்பிய புகாரை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வேல்முருகன் பேசிய வீடியோவும் புகாரில் இணைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் பட்சத்தில் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடலாம் என கூறப்படுகிறது. வேல்முருகன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டால் அவர் பதவிக்கு சிக்கல் வரும் என்கின்றனர். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கூடுதலாக வேல்முருகனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+