நவம்பர் 1 தமிழ்நாடு நாள்! அடுத்தாண்டு முதல் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்! வேல்முருகன் வேண்டுகோள்!
சென்னை: நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல வருடா வருடம் தமிழ்நாடு நாளை விழாவாகக் கொண்டாட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

1956 நவம்பர் 1-ஆம் நாள் தான், தமிழர்களின் தாயகமாக - ஒரு மாநிலமாக - தமிழ்நாடு, இந்தியச் சட்டப்படி அமைக்கப்பட்டது. வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே நம் முன்னோர்கள், தமிழ்நாடு தமிழர்க்கே என்று கோரிக்கை வைத்தார்கள். குறிப்பாக, 1937-இல் திருச்சியில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் முதல் முதலாக முறைப்படி தமிழ்நாடு தமிழருக்கே தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
ஆந்திர மாநிலம் கோரிக்கையை முன்வைத்து, தெலுங்கர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டத்தின் காரணமாக, மொழி - இனவழி முதல் மாநிலமாக ஆந்திரப்பிரதேசம் 1953 அக்டோபர் 1-ஆம் நாள் உருவானது.
பின்னர், வீரமிக்க போராட்டங்களின் காரணமாக, 1956 நவம்பர் 1 அன்று, மொழி - இனவழி மாநிலமாக தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் என்று ம.பொ.சி. வலியுறுத்தினார்.
வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட தனி அரசையும், வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட தனி நிலப்பரப்பையும், நீண்ட நெடிய புகழ்மிக்க வரலாற்றையும், சிறப்புமிக்கத் தனிப் பண்பாட்டையும், சீர்மிகு பழம்பெருமை மிக்க மரபையும், வளமிக்க தமிழ்மொழியையும் உடைய நமது தமிழ்நாடு உருவாகிய நாளான நவம்பர் 1 என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் வருடா வருடம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு முக்கிய நாளாகும்.
நமது தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றைப் படித்தறிந்து, நமது நிகழ்கால நடப்புகளை கூர்ந்து நோக்கி, நமது வருங்காலத்திற்கான திட்டங்களைத் தீட்ட வேண்டிய நாள் இந்நாள். தமிழர்கள் அனைவரும் சாதி, மதம், மொழி கடந்து ஒன்று திரண்டு தங்கள் வலிமையை, பலத்தை, ஒற்றுமையைப் பறைசாற்ற வேண்டிய நாள்.
காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, பாலாற்றுப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, ஈழப்பிரச்சினை, தமிழ் மொழி தமிழ்நாட்டில் கல்வி மொழியாக, ஆட்சி மொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற மொழியாக இல்லாத பிரச்சனை, கூடங்குளம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள், சாதி மதம் சார்ந்த பிரச்சனைகள் என அளவற்ற பிரச்சினைகளை நமது மக்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
அவைகளை தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொண்டு, தங்களது வாழ்வை வளமும் நிறைவும் கொண்டதாகவும் சமத்துவமும், சமூக நீதியும் கொண்டதாகவும் ஆக்க வேண்டும்.குறிப்பாக, நமது பண்டைய அடையாளங்களை மீட்டெடுக்கவும், சாதிகளற்ற, மத ஒற்றுமைமிக்க, சமத்துவமும், சமூகநீதியும் கொண்ட தமிழ்நாட்டை உருவாக்கவும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
அதற்கேற்றவாறு, அடுத்தாண்டாவது, நவம்பர் முதல் நாளைத் தமிழ்நாடு அரசு விடுமுறை நாளாக அறிவித்து, அந்நாளை வருடா வருடம் தமிழ்நாடு நாள் விழாவாகக் கொண்டாட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications